Interview Stories

தமன்னா கூறும் அதிரடி பதில்கள் – ‘Action’ special

சுந்தர்.C இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கும்ஆக்சன்  படத்தில் நடித்த அனுபவத்தை நம்மோடு பகிர்வதோடு சேர்த்து, சில விறுவிறுப்பான கேள்விகளுக்கும் பதிலளிக்கிறார் நடிகை தமன்னா.

எப்படி நீங்க ஆக்சன் படத்துக்குள்ள வந்தீங்க?

“இந்த வருஷம் நிறைய நல்ல படங்கள், வித்யாசமான படங்கள் பண்ணினேன். But ஒரு Complete action படம் பண்ண இப்போதான் வாய்ப்பு கிடைச்சது.  விஷால் ஒரு நல்ல Action ஹீரோ, அவர் கூட Work பண்றதும் ரொம்ப Comfortable-ஆ இருந்துச்சு. அதுமட்டுமில்லாம சுந்தர்.C sir கூட Work பண்ணனும்னு எனக்கு ரொம்ப நாளா ஆசை, அதுக்கும் இப்போ தான் Chance கிடைத்தது.”

ஒரு Complete Action படம் பண்றது எவ்ளோ Challenging-ஆ இருந்துச்சு?

“ரொம்ப வித்யாசமான Experience-ஆ இருந்துச்சு. நிறைய Sequence-ல stunt இருக்கும், திடீர்னு அங்கயும் இங்கயும் பறக்குறமாறி Sequence-லாம் இருக்கும், அதெல்லாம் ரொம்ப Challenging-ஆ இருந்துச்சு. அதுமட்டுமில்லாம Correct-ஆன Diet-லாம் maintain பண்ண வேண்டியிருந்துச்சு.”

தமன்னா

எந்த 3 வார்த்தைகளை வைத்து உங்கள் Character-ஐ Define பண்ணலாம்?

“Chilled out, Hardworking, Genuine”

உங்களுடைய மூன்று செல்ல பெயர்கள் என்னென்ன?

“தம்மு, டாமி, தம்ஸ்.”

தென்னிந்திய கதாநாயகிகளில் எந்த மூன்று பேர் உங்களின் Favorite?

ஷ்ருதி ஹாசன், நயன்தாரா, Sweety (அனுஷ்கா)”.

உங்களுக்கு விருப்பமில்லாத மூன்று உணவுகள் என்னென்ன?

“எனக்கு Foodனாலே பிடிக்கும். அதுலயும் காரசாரமான recipes ரொம்பவே பிடிக்கும்”.

நீங்க அதிகமா Use பண்ற மூன்று Curse Words என்னென்ன? 

“சிந்தி மொழியில சொல்றேன்.  ‘ஒழுக்கப்பட்டா’ (முட்டாள் பையன்), வாங்க (கத்திரிக்காய்). தமிழ்ல ‘லூசு’-ன்னு சொல்லி திட்டுவேன்.”

உங்களுக்கு பிடிச்ச மூன்று லிப்ஸ்டிக் கலர்கள் என்னென்ன?
“Pink, Nude, Red”

உங்களுக்கு பிடித்த பாடல் எது?

“நான் பெரிய பிரபுதேவா Fan. ‘முக்காபுலா’, ‘ஊர்வசி’ பாடல்கள்லாம் ரொம்ப பிடிக்கும்.”

யாரெல்லாம் உங்கள் திரையுலக நண்பர்கள்?

“ஷ்ருதி, தனுஷ், பிரபாஸ்.”

நீங்க உங்கள பத்தி கேள்விப்பட்ட interesting ஆன Rumour எது?

Avatar Part 2 படத்துல நான் நடிக்க போறேன்னு பேசுகிட்டாங்க. என் முகத்துல நீல Paint அடிச்சா அந்த படத்துல வருகிற character மாதிரி இருப்பேன்னு சொன்னாங்க.”

தமன்னா

ஒரு வித்யாசமான Fan Moment-னா எதை சொல்லுவீங்க?

பையா பட Shooting அப்போ ஒரு Fan Shot நடுல வந்துட்டாரு, அது ரொம்ப funny-ஆ இருந்துச்சு.”

உங்க Plus and Minus-னு ஒரு விஷயத்த சொல்லனும்னா எதை சொல்லுவீங்க?

“நான் ரொம்ப Impulsive, எந்த விஷயத்தையும் Hide பண்ண மாட்டேன், எல்லாத்துக்கும் உடனே React பண்ணிருவேன்.”

தமன்னா கிட்ட இருக்க ஒரு Positive Attitude-னா அது என்னது?

“ஒரு விஷயம் பண்ண முடியலனா, அதை கத்துகிற வரைக்கும் விடாம Try பண்ணிட்டே இருப்பேன்.”

நீங்க அதிகமா Use பண்ற Emoji எது?

“Kiss Emoji.”

முழு Interview-ஐ கீழே கண்டு மகிழுங்கள்👇👇:

Interviewed by Harini 

About the author

shafin

Just living to chase my passion. No matter whatever it takes.

Add Comment

Click here to post a comment