Specials Stories

ஆர்வத்தை அதிகரிக்கும் Motion Poster-கள்

kollywood-motion-poster

புதிதாக வெளிவரவிருக்கும் திரைப்படங்களின் மேல் மக்களுக்கு எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகமாகத்தான் இருக்கும். அந்த ஆர்வத்தை தூண்டுவதில் திரைப்படங்களின் Motion Poster-களுக்கு பெரிய பங்கு உள்ளது.

இதுவரை தமிழில் வெளிவந்த உங்கள் மனம் கவர்ந்த Motion Poster-களில் இருந்து சிலவற்றையும், அதில் Reveal செய்யப்பட்ட தகவல்களையும் இந்த தொகுப்பில் காணலாம்.

1. கத்தி

தளபதி விஜய் – A.R. முருகதாஸ் கூட்டணியில் 2014-ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கத்தி. இதன்  Motion Poster அந்த ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி வெளியிடப்பட்டது. பலரும் ரசிக்கும் வகையில் இருந்த இந்த Motion Poster-ல் சென்னையின் வரைபடத்தில் இருந்து விஜயின் முகம் தோன்றுவது போல் வடிவமைக்கப்பட்டிருக்கும். இதன் உள்ளர்த்தம் அப்படத்தை பார்க்கும்போது நமக்கு புரியவரும். அப்படத்தின் ஒரு முக்கிய கட்டத்தில்  விஜய் சென்னை மாநகரத்தின் வரைபடத்தை உற்று நோக்கும் ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். சென்னை நகரத்தில் தண்ணீர் எவ்வளவு முக்கியம் என்பதை பற்றியும் , நாட்டிற்கு விவசாயம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்தும் வகையில் இப்படத்தில் காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கும்.

2. விஸ்வாசம்

2019-ஆம் ஆண்டின் பொங்கல் ரிலீஸாக வந்த படம் தான் தல அஜித் – இயக்குனர் சிவா கூட்டணியின் நான்காவது படமான விஸ்வாசம். இதன் Motion Poster-ல் நடிகர் தம்பி ராமையாவின் குரலில் “தூக்குதுரைனா அடாவடி..” எனத் தொடங்கும் வசனம், அப்படத்தில் தல அஜித்தின் Character-ஐ விளக்கும் வகையில் இருக்கும். இந்த Motion Poster தல ரசிகர்களால் ஆரவாரமாக கொண்டாடப்பட்டது.

3. ரெமோ

சிவகார்த்திகேயனின் திரையுலக வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் ரெமோ. இப்படத்தில் சிவகார்த்திகேயன் பெண்வேடம் போட்டு நடித்திருப்பார். ரெமோ படத்தின் Motion Poster-ல் காதலை மனதில் உருவாக்கும் Cupid விடும் அம்பு சிவகார்த்திகேயன் மேல் பட்டதும் சிவகார்த்திகேயனின் நர்ஸ் வேடம் வெளிவரும் வகையில் அமைந்திருக்கும். அப்படத்திலும் அவருக்கு காதல் வந்தவுடன்தான் அக்காதலை வெற்றிபெற செய்ய சிவா நர்ஸ் வேடம் அணிவார்.

4. ஐ

ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்து வெளிவந்த பிரம்மாண்ட வெற்றித் திரைப்படம் ‘ஐ’ . இப்படத்தின் Motion Poster செப்டம்பர் 11, 2014 அன்று வெளியானது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளிவந்த இந்த Motion Poster-ல் நடிகர் விக்ரமின் மாறுபட்ட தோற்றத்தை Reveal செய்திருப்பர். அந்த தோற்றத்துக்கும் கதைக்கும் உண்டான தொடர்பு படம் பார்க்கும்போது நமக்கு புரியவரும்.

5. கொடி

தனுஷின் இரட்டைவேட நடிப்பில் வெளிவந்த சூப்பர்ஹிட் திரைப்படம் கொடி. இப்படத்தில் தனுஷின் இருவேடமும் இப்படத்தின் Motion Poster-ல் Reveal செய்யப்பட்டிருக்கும். ஒரு ஜீப்பில் உள்ளே தம்பியாக நடித்த தனுஷும் வெளியே அண்ணன் தனுஷும் அமர்ந்திருப்பது போல் Motion Poster உருவாக்கப்பட்டு இருக்கும்.

6. சிங்கம் 3

சிங்கம் Series-ல் இரண்டு வெற்றிப்படங்களை தந்த சூர்யா – ஹரி கூட்டணியில் வெளிவந்த திரைப்படம் சிங்கம் 3. இப்படத்தின் Motion Poster ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிங்கம் ஒன்று மற்றும் இரண்டாம் பாகத்தில் இருந்த அதே கம்பீரமான காவல்துறை அதிகாரியாக இப்படத்திலும் சூர்யாவின் தோற்றம் அமைந்திருக்கும்.

7. தர்பார்

2020-ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாக இருக்கும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் திரைப்படத்தின் Motion Poster சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆரவாரமான வரவேற்பை பெற்றது. இதில் ரஜினி 27 வருடங்கள் கழித்து போலீஸாக நடிக்கிறார். அனிருத்தின் Mass-ஆன பின்னணி இசையுடன் வந்த இந்த  Motion Poster-ல் ‘ஆதித்ய அருணாச்சலம்’ எனும் ரஜினியின் கதாபாத்திரமும் Reveal செய்யப்பட்டிருக்கும்.

இதுபோல பல படங்களுக்கு  Motion Poster-கள் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் தூண்டியிருக்கிறது. சினிமா ஆர்வலர்கள் Motion Poster-களில் ஒளிந்திருக்கும் அப்படத்தை பற்றிய ரகசிய தகவல்களை தெரிந்துகொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகின்றனர்.

About the author

shafin

Just living to chase my passion. No matter whatever it takes.