Specials Stories

குட்டி தளபதியின் குட்டி கதை

கோலிவுட் வரலாற்றில் பல குழந்தை நட்சத்திரங்களை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம் . அந்த வரிசையில் தளபதி விஜயும் 6 திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் . அந்த ஆறு படங்களையும் இயக்கியது விஜயின் தந்தை S.A .சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது .

விஜய் தனது 10 வயதிலேயே குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கிவிட்டார் .1984 ஆம் ஆண்டு புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்களின் வெற்றி  திரைப்படத்தில் தான் முதன் முதலில் விஜய் குழந்தை நட்சத்திரமாக தோன்றினார் .

குடும்பம் படத்தில் விஜய்

அதைத் தொடர்ந்து அதே வருடம் வெளிவந்த  குடும்பம்  திரைப்படத்திலும் நடித்தார் . விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த 6 படங்களில் 4 படத்திற்கு விஜயகாந்த் தான் கதாநாயகன் என்பது குறிப்பிடத்தக்கது . விஜயகாந்தின் வெற்றி , குடும்பம்  , வசந்த ராகம்  மற்றும் சட்டம் ஒரு விளையாட்டு  படங்களில் விஜய் நடித்துள்ளார் .

இதைத்தவிர நடிகர் ராம்கியின் இது எங்கள் நீதி  மற்றும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின்  நான் சிகப்பு மனிதன்  படத்திலும் குழந்தை நட்சத்திரமாக தளபதி விஜய் நடித்துள்ளார் . 1984 முதல் 1988 வரை குழந்தை நட்சத்திரமாக திரையில் வளம் வந்த விஜய் 1992 ஆம் ஆண்டு முதன் முதலில்  நாளைய தீர்ப்பு  படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார் .

வசந்த ராகம் படத்தில் விஜய்

 

ஆரம்ப காலங்களில் விஜய் தோல்விகளையும் அவமானங்களையும் மட்டுமே நிறைய சந்தித்துள்ளார் . 1996 ஆம் ஆண்டு இயக்குனர் விக்ரமனின் பூவே உனக்காக  திரைப்படம் தான் விஜயின் திரையுலக வாழ்க்கையில் முதல் திருப்புமுனையாக அமைந்த வெற்றிப்படம் .

அதைத் தொடர்ந்து காதலுக்கு மரியாதை  , துள்ளாத மனமும் துள்ளும்  , மின்சார கண்ணா  போன்ற படங்களின் மூலம் மக்கள் மனம் விரும்பும் கதாநாயகனாக விஜய் மாறினார் . 2003 வரை பல வெற்றி படங்களை கொடுத்த விஜயை ஒரு ஆக்ஷன் ஹீரோவாக மாற்றியது  திருமலை  திரைப்படம் . அதை தொடர்ந்து கில்லிமதுர  ,  திருப்பாச்சி  என பல ஆக்ஷன் படங்களில் நடித்தார் .

இது எங்கள் நீதி படத்தில் விஜய்

இதுவரை வெளிவந்த 63 விஜய் படங்களில் 7 படங்கள் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது . தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருக்கும் பிகில் படத்தை தொடர்ந்து கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 64 படமாக்கப்பட்டு வருகிறது . சோதனைகளும் வேதனைகளையும் கடந்தால் தான் சாதனைகள் கைக்கூடும் என்பதற்கு விஜய் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

 

About the author

shafin

Just living to chase my passion. No matter whatever it takes.

Add Comment

Click here to post a comment