Cinema News Stories

Papanasam – 5 YEARS

த்ரிஷ்யம் என்னும் மலையாள திரைப்படத்தை தமிழில் ரீமேக் செய்து எடுக்கப்பட்ட பாபநாசம் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

கமல்ஹாசன், கௌதமி, நிவேதா தாமஸ், கலாபவன் மணி, M.S. பாஸ்கர் என பலரும் நடித்த இப்படத்தில், ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதையுடன் நெருக்கமான தொடர்பு அமையும்படி படம் அமைந்திருக்கும்.

கமல்ஹாசன் ஏற்று நடித்த ‘சுயம்புலிங்கம்’ கதாபாத்திரம் படம் பார்ப்போரின் மனதில் ஆழமாகப் பதிந்த கதாபாத்திரமாக மாறி விட்டது. இந்த திரைப்படம் பாசமான குடும்பத்தலைவன் தன் குடும்பத்திற்காக “எத்தனை சிரமங்கள் வேணாலும் தாங்கிக் கொள்வான், எத்தனை பிரச்சனைகள் வந்தாலும் துணிந்து எதிர் கொள்வான்” என்பதை உணர்த்தும் வகையில் எடுக்கப்பட்டிருக்கும்.

மலையாளத்தில் மோகன்லாலை கதாநாயகனாக வைத்து ‘திரிஷ்யம்’ படத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் அவர்களே தமிழிலும் பாபநாசத்தை இயக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.  ஜிப்ரானின் பின்னணி இசையும் பாடல்களும் படத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்திருக்கும்.

இந்த திரைப்படத்தில் அதிகமாக குறிப்பிடப்படும் “ஆகஸ்ட் இரண்டாம் தேதி” படம் வெளியாகி இத்தனை ஆண்டுகள் கழித்தும் படம் பார்ப்பவர்கள் மனதில் மறவாத தேதியாக பதிந்துள்ளது. அந்த அளவிற்கு கதையை நுணுக்கமாகவும், அனைவருக்கும் விளங்கும் வகையிலும் அமைத்திருப்பார் ஜீத்து ஜோசப்.

இப்படம் வெளியாகி ஐந்து ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இப்படத்தின் வெற்றியை ரசிகர்கள் #5YearsofPapanasam எனும் Hashtag உருவாக்கி இணையத்தில் கொண்டாடி வருகின்றனர்.

About the author

Harini

A desk hand that tirelessly churns out news articles and videos.