Cinema News Stories

கிருஷ்ணசாமி பாக்யராஜ் எனும் K.பாக்யராஜ்!

கலைத்துறையில் சிலரின் பெயர் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கும். தனது தனித்திறமையை காட்டிலும் தனது படைப்பாற்றல் திறமையை உலகிற்கு காட்டிய பெயர் பெற்ற திரைப்பட இயக்குனர்களில் இவரும் ஒருவர்.

தொழில்நுட்பம் அறிமுகமாகும் காலகட்டத்தில், அனைத்து மக்களையும் கவரும் வண்ணம் SCREEN PLAY அமைத்து படத்தை உருவாக்கியது இவரது வெற்றி. படத்தை உருவாக்கும் இயக்குனராக மட்டுமில்லாமல் சில நாவல்களையும் எழுதியுள்ள எழுத்தாளர் இவர். ஈரோடு மாவட்டத்தில் பிறந்து, சினிமா துறையில் அறிமுகமாகி, எட்டுத்திக்கும் இவர் புகழ் பேசப்படுகிறது இன்று வரை.

16 வயதினிலே எனும் படத்தில் அறிமுகமாகி , வயதுகள் கடந்தாலும் இன்று வரை தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கியது இவரது இமாலய சாதனை. தமிழ் சினிமாவில் பல திறமையான திரைக்கதை எழுத்தாளர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கி உள்ளனர். அப்படிப்பட்ட சிறந்த திரைக்கதை எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். இவர் தமிழ் சினிமா மட்டுமின்றி, ஹிந்தி, தெலுங்கு என பிற மொழிகளிலும் தன் திறமையை காட்டியுள்ளார்.

ஒரு திரைப்படத்தை வெறும் இரண்டரை மணி நேரப் படமாக மட்டுமே ஒதுக்கி வைத்துவிட முடியாது. சினிமா என்பது நம்மை சிரிக்கவைக்க வேண்டும். பதறவைக்க வேண்டும். கோபமூட்ட வேண்டும். வேதனையுறச் செய்யவேண்டும். நம்மைத் தவிக்க விடவேண்டும். இப்படி எல்லாமுமாகச் செய்ததில்தான் அடங்கியிருக்கிறது பாக்யராஜின் திரைக்கதை மாயாஜாலம்.

திரை உலகின் ஜாம்பவான்களில் இவரும் ஒரு ஜாம்பவான். சிறந்த இயக்குனர்கள் வரிசையில் இவர் பெயருக்கென தனித்த இடம் உண்டு. Director Krishnaswamy Bhagyaraj எனும் K.பாக்யராஜ் அவர்களுக்கு Suryan FM இன் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

Article By RJ Varsha

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.