பீஸ்ட் திரைப்படத்திற்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படத்திற்கு நீண்ட நாட்களாகவே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் நேற்று ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியான ‘ஜெயிலர்’ படத்தை ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகின்றனர். மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் மிகப்பெரிய வசூலை ஈட்டியுள்ளது ஜெயிலர் திரைப்படம்.
ஆரம்ப மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் முதல் நாளில் ரூ 50 கோடிக்கு மேல் வசூலித்து ஒரு வரலாற்று தொடக்கத்தைப் பெற்றுள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். ‘ஜெயிலர்’ உலகம் முழுவதும் பல சாதனைகளை முறியடித்ததுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .
ஆதாரங்களின்படி, ‘ஜெயிலர்’ படைத்த சாதனைகள் :
- கர்நாடகாவில் ஆல் டைம் ரெக்கார்ட் ஓப்பனிங் செய்த முதல் தமிழ் படம்.
- 2023-ல் இந்திய அளவில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம்.
- அமெரிக்காவில் அதிக முதல் நாள் வசூல் செய்த படம்.
- கேரளாவில் இந்த ஆண்டின் மிகப் பெரிய ஓப்பனிங் இருந்த படம்.
இந்த சாதனைகள் திரை நிபுணர்கள் கூறிய தரவுகளின் அடிப்படையில் கணிக்கப்பட்டது. இன்னும் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் வெளியிடப்படவில்லை. எப்படி இருந்தாலும் ‘ஜெயிலர்’ உலகம் முழுவதும் பல சாதனைகளை படைத்து, மாபெரும் வெற்றிப் படமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.