Intro song வேணுமா அது இருக்கு, குத்து song வேணுமா அதும் இருக்கு, melody song வேணுமா அதும் இருக்கு, மாஸ் bgm வேணுமா அதும் இருக்கு… இப்டி இவரோட பாட்ட கேட்டாலே ஒடம்பு automatic-ஆ goosebumps ஆகிரும். Yes goosebumps-சையே goosebumps ஆக்குற நம்ப வித்யாசாகர் பத்திதான் சொல்லிட்டு இருக்கேன்…
இசை குடும்பத்துல பிறந்ததுனால மியூசிக் மேல ரொம்ப ஆர்வம் சின்ன வயசுல இருந்து, அதே ஆர்வத்தோட தன் அப்பா ஓட recording studio-லாம் போய் எல்லா musical instruments-ம் வாசிக்க கத்துக்குறாரு. அவரோட சின்ன வயசுலேயே MS விஸ்வநாதன், இளையராஜா போன்ற பெரிய மியூசிக் ஜாம்பவான்கள் கூட work பண்ணிருக்காரு. 1989 தமிழ் சினிமால “பூ மனம்” படத்துல திரை உலகுல entry குடுக்குறாரு. 1994 வித்யாசாகர் action king arjun இவுங்க ரெண்டு பேரோட combo-ல “Jaihind” படம் ரிலீஸ் ஆகுது.
இந்த படத்துக்கு அப்புறம்தான் வித்யாசாகர்னா யாருனு எல்லாருக்கும் தெரியவருது. 25 வர்ஷம் முன்னாடி வந்த கர்ணா படத்துல வர மலரே மௌனமா பாட்டோட கதை தெரியுமா?? நம்ப SPB vidyasagar-ஓட மியூசிக்ல recording studio-ல பாட்டு பாடுறாரு. ஒரு பாட்டு முடிச்ச ஒடனே இன்னோரு பாட்டு இருக்கு அதையும் பண்ணிரலாம்னு வித்யாசாகர் சொல்லுறாரு.
அதுக்கு SPB சொல்றாரு சினிமா industry-ல இருக்க எல்லாருக்குமே தெரியும் நான் நைட் 9 மணிக்கு மேல பாடமாட்டேன் அப்டினு. இதான் கடைசி பாட்டு முடிச்சிரலாம்னு request-டா வித்யாசாகர் கேக்க வாய்ப்பே இல்லனு சொல்லிருறாரு SPB. okay சார் நீங்க பாட வேண்டாம் tune மட்டும் கேளுங்க எதும் changes இருந்த சொல்லுங்க நா விடியுறதுக்குள்ள அத சரி பண்ணிடுறேன் அப்படினு சொல்றாரு. சரி போடுங்கனு சொல்றாரு SPB.
உடனே வித்யாசாகர் Janaki அம்மா பாடின Portion-அ போடுறாரு. அத கேட்ட உடனே நா இப்பயே பாடுறேனு Night Full-அ பாடி முடிச்சி குடுக்குறாரு SPB. இந்த பாட்ட பாடி முடிச்ச உடனே SPB சொன்ன வார்த்தை… எனக்கு 1000 பாட்டு குடுக்க தேவையில்ல, இந்த மாதிரி ஒரு பாட்டு குடுங்க போதும்னு சொல்லிருக்காரு.
நம்மலாம் யோசிச்சிகூட பாக்கமுடியாத Combo-வ உருவாக்கி அந்த பாட்ட மரண Hit ஆக்குறதுல இவரு Expert-ங்க. Example-க்கு எதிரும் புதிரும் படத்துல இருந்து ஸவர்ணலதா புஸ்பவனம் குப்புசாமி சேந்து பாடுன” தொட்டு தொட்டு பேசும் சுல்தானா” பாட்டு ஒரு புது Vibe அந்த Time-ல இருந்தங்களுக்கு கொடுத்துச்சு. ஒரு ஸ்கூல்ல Function வருதுன்னா சினேகிதி படத்துல இருந்து “ராதை மனதில்” பாட்டு இல்லாம இப்போ வரைக்கும் இருக்காது அப்படி ஒரு Evergreen பாட்ட நமக்கு குடுத்திருக்காரு வித்யாசாகர்.
2002-ல ஒரு பெரிய சம்பவம் பண்ணுறாரு. தமிழ்ல இருந்து Hollywood-க்கு First First மியூசிக் போட்டவர் நம்ப வித்யாசாகர் தாங்க. “Beyond the Soul” அப்டிங்குற ஹாலிவுட் படத்துக்கு மியூசிக் போட்டு நா World Famous மியூசிக் டைரக்டர்னு காட்டுனாரு.
இவரு எவ்வளவோ பாட்டு Hit குடுத்தாலும் இந்த ஒரு பாட்ட அடிச்சிக்க இப்போ வரைக்கும் இந்த உலகத்துல பாட்டு இல்லனு சொல்லலாம். இந்த ஒரு பாட்ட கேக்குறப்ப ஒருத்தருக்கு love failure இல்லனாலும் மனசுல ஒருவிதமான feel ஏற்படும். அது என்ன பாட்டுனா இயற்கை படத்துல இருந்து “காதல் வந்தால் சொல்லி அனுப்பு”. இந்த பாட்டு ரிலீஸ் ஆகி கிட்டத்தட்ட 22 வர்ஷம் ஆகிருச்சு. இன்னமும் பல 90’s Kids இந்த பாட்ட Status-ல வெச்சிட்டு இருக்காங்க.
இதுவரைக்கும் மொத்தமா 43 Film Awards வாங்கிருக்காரு நம்ப வித்யாசாகர். Leo படத்துல ஒரு பழைய Song வரும் நியாபகம் இருக்கா? “தாமர பூவுக்கும்” இந்த பாட்ட Compose பண்ணது நம்ப வித்யாசாகர் தாங்க. Vibe-னாலே வித்யாசாகர் தானு அப்போ இருந்து இப்போ வரைக்கும் proof பண்ணிருக்காரு நம்ப மியூசிக் கிங் வித்யாசாகர். இதே மாதிரி இன்னும் எக்கச்சக்க Hit பாட்டு குடுக்கணும் அப்டினு சொல்லிட்டு… Melody king & Vibe king வித்யாசாகர்க்கு சூரியன் FM சார்பா இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.