வாயாடி குழந்தைகளுக்கு வாயாட ஒரு வாய்ப்பு !
குழந்தை செல்வங்களின் மழலை பேச்சை ரசிக்காதவர்கள் இவ்வுலகில் உண்டோ ? . வாயில் ளகரங்கள் தவழும் மழலையை முதன்முதலில் கேட்கும்போதே எண்ணற்ற மகிழ்ச்சியில் நெகிழ்ந்துபோன தருணங்கள் பெற்றோருக்கு வரமே ! . கள்ளங்கபடமற்ற அந்த கலகலப்பான குரலை சூரியன் FM-ன் “குட்டி RJ ” நிகழ்ச்சியின் மூலம் அனைவரும் கேட்கலாம் .
சென்னை , கோவை , திருநெல்வேலி , திருச்சி , தூத்துக்குடி , பாண்டிச்சேரி , சேலம் , வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய நகரங்களில் ” குட்டி RJ ” நிகழ்ச்சி வெற்றிகரமாக பத்து நாட்களையும் கடந்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது . நவம்பர் 15 வரை இந்நிகழ்ச்சி சூரியன் FM-ல் ஒலிபரப்பப்படும் . இதுவரை இந்நிகழ்ச்சியில் பேசிய குழந்தைகளின் புகைப்படங்களில் சிலவற்றை இப்பதிவிற்கு கீழே காணலாம் .
சென்னை பங்கேற்பாளர்கள் :
பாண்டிச்சேரி பங்கேற்பாளர்கள் :
திருநெல்வேலி பங்கேற்பாளர்கள் :
உங்கள் வீட்டில் உள்ள 5 முதல் 12 வயதிற்கு உட்பட்ட மழலை செல்வங்களின் அழகான குரலை ஒலிப்பதிவு செய்து கொடுக்கப்பட்டுள்ள WHATSAPP எண்ணிற்கு உங்களை தொடர்பு கொள்வதற்கான தகவலையும் சேர்த்து அனுப்பினால் மட்டும் போதும். சூரியன் FM-ன் “குட்டி RJ ” நிகழ்ச்சி மூலம் உங்கள் குழந்தைகளின் குரலும் சூரியன் FM-ல் ஒலிபரப்பப்படும் .
இதுவரை உங்கள் உற்றார் உறவினர் மட்டும் கேட்டுக்கொண்டிருந்த உங்கள் குழந்தையின் இனிமையான மழலை ஓசையை இனி மொத ஊரும் கேட்டு ரசிக்கும் . இனி உங்கள் வீட்டு செல்லப்பிள்ளைகளின் குரலையும் நம்ம சூரியன் FM-ல் கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க.
தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் :
சென்னை : 8678935935
திருச்சி : 9952819935
பாண்டிச்சேரி : 9994555935
ஈரோடு : 7397393919
சேலம் : 7397376939
திருநெல்வேலி :9787935935
கோவை : 9087935935
வேலூர் : 8056939939
Add Comment