Events Stories

மக்கள் தீர்ப்பே தமிழின் தீர்ப்பு !!!

தமிழ் ஆர்வலர்களின் தமிழ் பற்றையும் திறமையையும் வெளிக்கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சியே “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” டிஜிட்டல் பேச்சுப்போட்டி ஆகும்.

தலைமுறை தாண்டிய செம்மொழி என்ற தலைப்பில் நடத்தப்பட்ட இப்போட்டியில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் தங்களது வீடியோக்களை எங்களுக்கு அனுப்பி பங்குபெற்றனர். பட்டிமன்ற பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர் மற்றும் ராஜா அவர்கள் அவற்றுள் சிறந்த 6 வீடியோக்களை தேர்வு செய்துள்ளனர்.

இந்த ஆறு போட்டியாளர்களில் 3 பேர் ஆண்கள் 3 பேர் பெண்கள். இவர்களில் இருந்து ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் வெற்றியாளர்களாக அறிவிக்கப்படுவர். இப்போட்டியின் வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மக்களாகிய உங்களிடம் வழங்கப்படுகிறது.

நடுவர்கள் தேர்வு செய்த 6 பேரின் வீடியோக்களையும் சூரியன் FM Facebook  பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவற்றுள் எந்த வீடியோவிற்கு அதிக Like-கள் கிடைக்கிறதோ அவர்களையே “தமிழ் எங்கள் உயிருக்கு நேர்” பேச்சுப்போட்டியின் வெற்றியாளராக அறிவிக்கப்படுவர் . அதிக Like-களை பெறும் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் போட்டியாளரே  இப்போட்டியின் வெற்றியாளர்கள்கள் ஆவர்.

நடுவார்களால் தேர்ந்தேடுக்கப்பட்ட 6 போட்டியாளர்களின் வீடியோ விவரங்களை கீழே காணுங்கள்:

“தலைமுறை தாண்டிய செம்மொழி” என்ற தலைப்பில் இவர்களின் இந்த பேச்சு உங்களுக்கு பிடித்திருந்தால், லைக் செய்யுங்கள்! உங்களுடைய ஒவ்வொரு லைக்கும் இவர்களது வெற்றிக்கான ஓட்டு!!

பிரேம்நாத்: https://www.facebook.com/SuryanFM/videos/241369704075555

வினோராஜ்: https://www.facebook.com/SuryanFM/videos/164372985406535

ஜவகர்: https://www.facebook.com/SuryanFM/videos/135439238028475

கலை சிந்து: https://www.facebook.com/SuryanFM/videos/1552076704978844

ஐஸ்வர்யா: https://www.facebook.com/SuryanFM/videos/370582070904709

தரணி: https://www.facebook.com/SuryanFM/videos/407945697245761

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு!!