Cinema News Specials Stories

செல்வத்தின் ராகவன் ‘செல்வ ராகவன்’

Selvaraghavan

துள்ளலா சினிமா மேல காதல் கொண்ட இவரு, ரெயின்போ வண்ணங்களால மனச மயக்குற மாதிரி இரண்டு உலகத்தை உருவாக்கினாரு, அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பான்னு இல்லாம புதுப்பேட்டைக்கு நான் தான் டான்னு நெஞ்ச நிமிர்த்தினவரு, ஸ்டைலா கெத்தா ஆயிரத்தில் ஒருவனா திரும்பவும் நானே வருவேன்னு வராரு.

இவரோட படங்களைப் பார்க்கும் போது நமக்கு நிறைய புதுமையான விஷயங்கள் கண்ணுக்கு தெரியும், திரும்ப இன்னொரு தடவ பாத்தா, இன்னும் புதுமை இருக்கும். இப்படி தான் சினிமாவுல பல விஷயங்களை ரசிகர்களுக்கு அவரோட படைப்புகள்ல நிறைச்சு வச்சிருக்காரு.

இப்படி தமிழ் சினிமாவோட பொக்கிஷமா இருக்குற, இவர் தான் இயக்குனர் செல்வராகவன். கதை எழுத சின்ன வயசுல இருந்தே விருப்பமா இருந்ததால, அவரோட அப்பா இயக்குனர் கஸ்தூரி ராஜாவோட தயாரிப்புல 2002-ல வெளியான ‘துள்ளுவதோ இளமை’ தான் இவரோட எண்ட்ரி டிக்கெட்.

இயக்குனர் செல்வராகவனா தன்னை நிலை நிறுத்திக்க பல படங்கள் தேவை படல, தன்னோட 2வது படமான ‘காதல் கொண்டேன்’ இவர முக்கியமான ஒரு தமிழ் இயக்குனரா அடையாளம் காட்டுச்சு. பொதுவா 3வது படம் இயக்குனர்களுக்கு கொஞ்சம் ரிஸ்க்ன்னு சொல்லுவாங்க. ஆனா தன்னோட மூணாவது படமான 7ஜி ரெயின்போ காலணி இன்னைக்கு வரைக்கும் காதல் கதைகளுக்கு ஒரு உதாரணமா இருக்கு.

நினைத்து நினைத்து பார்த்தேன்னு கிளைமாக்ஸ்ல வர பாட்டு காதலிக்காதவங்கள கூட உருக்கிடும். டான் பத்தின கதையில ஒல்லியா ஒரு ஹீரோவ நடிக்க வைக்க முடியும்ன்னு சினிமா இலக்கணத்த உடைச்ச புதுப்பேட்டை, வரலாற்று தொடர்ச்சியா மெய்சிலிர்க்க வைச்ச ஆயிரத்தில் ஒருவன் இப்படி காலங்கள் கடந்தும் தமிழ் சினிமா ரசிகர்களால போற்றப்பட்டும் படைப்புகள் இவரோடது.

குறிப்பா ஆயிரத்தில் ஒருவன் 2010-ல திரும்ப ரிலீஸ் பண்ணப்போ மிஸ் பண்ணிட்டோமேன்னு பல ரசிகர்கள் feel பண்ணினாங்க. காதல் படங்கள் எடுக்குறது ரொம்ப ஈஸி, fantasy படங்கள் எடுக்க தான் இங்க ஆளு இல்லன்னு சொன்ன செல்வராகவன் இரண்டாம் உலகம் படத்துல ஒரு பெரிய பிரம்மாண்ட உலகத்த ரசிகர்களுக்காக கொடுத்தாரு.

இவருடைய மனச நெருடுற காதல் கதைகள்ல இருக்குற அதே ஈர்ப்பு, இந்த மாதிரியான வித்தியாசமான முயற்சிகளிலும் இருக்கு. இரண்டாம் உலகத்துல ஒரு சிங்கம் இருக்குன்னு பில்டப் கொடுத்தப்ப, அத பாக்கணும்ன்னு எனக்கு எதிர்பார்ப்பு எகிறிடிச்சு. அந்த பில்டப்க்கு எல்லாம் தீணி போடுற மாதிரி மனித முகத்தோட ஒரு சிங்கம் அந்த வயல்வெளில வந்து நின்னப்ப, ஏதோ ஹாலிவுட் படம் பாக்குற மாதிரியே இருந்துது.

இது ஒரு பக்கம்னா, இளைஞர்கள் தங்களோட profession வாழ்க்கைய எப்படி பார்க்கணும்னு மயக்கம் என்ன படத்துல சொன்னது அருமை. இவரோட படத்துல ஹீரோஸ்க்கு மட்டும் முக்கியத்துவம் இல்லங்க, ஹீரோயின்ஸ்க்கு இன்னும் அதிக முக்கியத்துவம் இருக்கும்.

ஒரு படம் முழுக்க சொல்ல வேண்டிய விஷயத்த, ஒரு frame-ல சொல்ல முடியும்னா அது இவரால மட்டும் தான் முடியும். இவரை பத்தி பேச ஒரு பக்கம் பத்தாதுங்க. அடுத்து beast mode-ல நடிக்கவும் ஆரம்பிச்சிட்டாரு, செல்வராகவனின் செல்வ வேட்டை தொடரும்.

Article by RJ Jae