Cinema News Stories

ONE YEAR OF JAILER

திருவிழா எனப்படுவது யாதெனில்.. அந்த திருவிழா அன்று நடைபெறும் கொண்டாட்டங்கள் மட்டும் அல்ல.., திருவிழாவிற்கான  அறிவிப்பில் துவங்கும் உற்சாகமே அந்த திருவிழாவிற்கான மிகப்பெரிய ஆரம்பம்… அப்படிப்பட்ட ஆரம்பம் தான் அண்ணாத்த திரைப்படத்திற்கு பிறகு சன் பிக்சர்ஸ் உடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் கூட்டணி என்ற செய்தி…

அந்த செய்தி வெளிவந்தவுடனேயே இது எந்த மாதிரியான திரைப்படமாக இருக்கும்? யார் இயக்குனர்? இசையமைப்பாளர் யார்? என்றெல்லாம் எதிர்பார்ப்புகள் எகிறத் தொடங்கியது.. அந்த பரபரப்பு அடங்குவதற்குள் *தலைவர் 169* திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பாக சன் பிக்சர்ஸ் வெளியிட்ட  வீடியோவானது இன்னும் அதிகமான எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது…

Rajini

அது, *சன் பிக்சர்ஸ்*, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார், இசையமைப்பாளர் Rock Star அனிருத்,  இவர்களின் கூட்டணியை உறுதி செய்தது.. அடுத்தடுத்த அப்டேட்டாக, உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஜொலிக்கும் மற்ற நட்சத்திரங்களாக, மலையாளத்தில் இருந்து மோகன்லால், ஹிந்தியில் இருந்து ஜாக்கி ஷெராஃப், கன்னடத்தில் இருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் இருந்து சுனில் வர்மா என இந்திய திரையுலகமே ஒன்று கூட…

இவர்களுடன் அனைவருக்கும் பிடித்த தமன்னா, நகைச்சுவை ICON யோகி பாபு, தரமணி வசந்த் ரவி, நீலாம்பரி ரம்யா கிருஷ்ணன், V.T.V கணேஷ், செவ்வாழை சரவணன், “இந்தாம்மா ஏய்”  மாரிமுத்து, அறந்தாங்கி நிஷா என பலரும் இணைய.. இவர்களை எல்லாம் தாண்டி வர்மனாக வந்து “காட்டுடா அந்த கருணைய” என அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தவர்தான் வில்லன் விநாயகன்…

இப்படிப்பட்ட தீபாவளியை திரையில் எப்போது காணப் போகிறோம் என்று எதிர்பாத்துக் கொண்டிருந்த நேரத்தில் சூப்பர் ஸ்டாரின் பிறந்தநாளுக்காக (12-12-2022) சன் பிக்சர்ஸ் கொடுத்து அடுத்த அப்டேட்தான் “Tiger Muthuvel Pandian ArrivesVideo” இணையம் எங்கும் MASS செய்த அந்த வீடியோவில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒருமுறை தனக்கே உரித்தான பாணியில் அரங்கேற்றினார் SUPER CLASS…

அதைத்தொடர்ந்து விறுவிறுப்பாக படப்பிடிப்பு நகர,ஆங்காங்கே ஷுட்டிங்கில் சூப்பர் ஸ்டாரை பார்த்தவர்களின் மனம் குளிர.. மருமகளாக நடித்த மிர்னா மேனன் சூப்பர் ஸ்டாரின் Interval Scene  Transformation நடிப்பை கண்டு மிரள…அந்த செய்தியை அறிந்து ரசிகர்ளின் எதிர்பார்ப்பு எகிற.. என இடைப்பட்ட படப்பிடிப்பு நேரங்களில் கூட ஜெய்லர் சிலிர்க்க வைத்தார் என்பதே உண்மை…

இவ்வாறே ஒட்டு மொத்த ஷுட்டிங்கையும் ஓய்வின்றி முடித்து..சூப்பர் ஸ்டார் + தமன்னா, மற்றும் படக்குழுவினர் ஒண்றிணைந்து ரசனையோடு Shooting Wrap Poster-ஐ வெளியிட்டு ரகளை செய்தது ஜெய்லர் டீம்… Post Production நடைபெற்ற வேளையில், First Single எப்போது வரும்?, அதற்கான Promotion Video எப்படி இருக்கும்? என்பதை பற்றி அனைவரும் ஆர்வமாக ஆலோசித்த போது…

July 06 2023ல் First Single Release என, நெல்சன் மற்றும் அனிருத்  தங்களுடைய பாணியிலேயே ப்ரமோஷன் வீடியோவை வெளியிட சொன்னபடியே July 06 2023ல் Release ஆனது Jailer-ன் First Single “காவாலா” தமிழும் தெலுங்கும் கலந்து, அருண்ராஜா காமராஜின் அசத்தலான வரிகளில், தமன்னாவின் கவர்ந்திழுக்கும் தோற்றத்தில் “காவாலா” பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது… 

காவாலா பாடல் ஒலித்த இடமெல்லாம் Positive Vibe தொடுக்க,அதையும் தாண்டி ஜெய்லருக்கான HYPE கொடுக்க, சூப்பர் ஸ்டாரின் Mass Entry க்காக காத்து கிடந்தவர்களின் எதிர்பார்ப்பை தட்டித்தூக்கியது,  “July 17 2023”அன்று வெளியான இரண்டாவது பாடலான “ஹுக்கும்”, “உன் அலும்ப பாத்தவன் உங்கப்பன் விசில கேட்டவன்”, குட்டிச் சுவத்த எட்டி பாத்தா உசுற கொடுக்க கோடி பேரு”, அலப்பறை கிளப்புறோம் தலைவர் நிரந்தரம்” போன்ற வரிகளை தந்து, உலகெங்கும் உள்ள சூப்பர் ஸ்டார் ரசிகர்களை உற்சாகமாக்கினார் கவிஞர் “சூப்பர் சுப்பு”

அதைத் தொடர்ந்து மற்ற இரு பாடல்களையும் இசை வெளியீட்டு விழாவில்  வெளியிட அதன் பின்னர் நம் கண்களுக்கு விருந்தானது “Jailer Show case (Trailer)” அப்போதே தெரிந்து விட்டது, சூப்பர் ஸ்டார் இத்திரைப்படத்தில் தரமான செய்கை ஒன்றை செய்திருக்கிறார் என்று… “இது சும்மா ட்ரைலர் தான்மா,  மெயின் பிக்சர இன்னும் பார்க்கலையே?” என்று சூப்பர் ஸ்டார் பாணியிலேயே செல்வதாக இருந்தது ஜெயிலரின் முழு அவதாரம்…

உலகெங்கும் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஆகஸ்ட் 10 2023-ல் ஜெயிலர் வெளியீடு… திரையரங்கம் எங்கும் திருவிழா கோலம்.. தமிழ் திரையுலகின்  Box Office-ஐ உடைத்தெரியும் அளவிற்கு சாதனை படைத்தது ஜெய்லருக்கான முன்பதிவு… ஆரம்பக் காட்சியிலேயே வில்லன் விநாயகத்தின் கொடூரத்தை காட்டிய பிறகு அதிரடியாக வந்து இறங்குவார் சூப்பர் ஸ்டார் என்று எதிர்பார்த்த நேரத்தில், 

அமைதியாக பூஜை செய்யும் விதமாக அவருடைய Opening-ஐ வைத்து… பேரனுக்காக யூடியூப் வீடியோ எடுக்கும் தாத்தாவாக முதல் காட்சியும்.. அடுத்த காட்சியிலேயே காருக்குள் சிறிய வில்லன்களை அடித்து துவம்சம் செய்வதை காட்டாமல் காட்டி “நான் DINOSAURதான் பேசுறேன்”  என்று கெத்து காட்டுவதன் மூலம், சூப்பர் ஸ்டாருக்கான ஆக்சன் காட்சிகள் இன்னும் ஏராளம் இருக்கிறது என்று சொல்லாமல் சொல்லி இருப்பார் இயக்குனர் நெல்சன்…

மகனை இழந்ததற்காக தவிப்பதாகட்டும்… பேரனை காக்க துடிப்பதாகட்டும்… குடும்பத்தினர் முன் சாதுவாக நடிப்பதாகட்டும்… வில்லனின் திட்டத்தை போலி கிரீடம் கொடுத்து உடைப்பதாகட்டும்.. என அனைத்து காட்சிகளிலும் “அட” போட வைத்து விடுகிறார் அந்த 73 வயது இளைஞர் …

படத்தில் வரும் அனைத்து கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும்… படம் முழுக்க நமது இதயங்களை திருடி செல்கிறார் “சூப்பர் ஸ்டார்” அதற்கு உறுதுணையாகவும் படத்திற்கு பக்கபலமாகவும் இருந்தது Rock Star அனிருத்தின் இசையும், கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவும், ஸ்டன்ட் சிவாவின் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளும்… முந்தைய படங்களில் நெல்சன் கையில் எடுத்த “Dark Humor” சூப்பர் ஸ்டாருக்கு எப்படி பொருந்தும் என்று நாம் யோசித்த வேளையில்..

பாரதியார் என்ன சொல்லியிருக்கார் தெரியுமா?என யோகி பாபு சூப்பர் ஸ்டாரிடம் கேட்டதற்கு பதிலடியாக.. “பாரதியார் சொன்னதுல ஏதாவது இவரிடம் சொல்ல வேண்டுமா?” என வில்லனிடம் யோகி பாபுவை மாட்டி விடும் காட்சியில்… தனக்கு Dark Humor-ம் வரும் என உணர்த்தி இருப்பார், உச்ச நட்சத்திரமான சூப்பர் ஸ்டார்…

மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப் ஆகியோர் ஜெயிலருக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும்… இறுதிக்காட்சியில் “அங்கு மூணாவதா ஒருத்தன் இருப்பானே?” என்று சூப்பர் ஸ்டார் சொன்னவுடன், சிவராஜ்குமார், ஜெயிலரின் வீட்டின் பாதுகாவலனாக இருந்து செய்யும் அதகளத்திற்கு கூட,  ஸ்கோர் செய்வது என்னவோ சூப்பர் ஸ்டார் தான்…  ஆக மொத்தம் “இங்க நான் தான் King, நான் வச்சது தான் சட்டம்” என்று.. 

பார்வையாளர்களாகிய நம்மை மகிழ்ச்சி சிறையிலடைத்த இந்த “ஜெயிலரின்” நினைவு ஓராண்டுக்கு மட்டுமில்லை, இன்னும் நூறாண்டுகளுக்கும் நிலைத்திருக்கும் என்பதே உண்மை… 

Article By RJ Naaga

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.