‘No Guts No Glory’ இந்த Dialogue யாருக்கு செட் ஆகுதோ இல்லையோ நம்ப Ak-க்கு ரொம்ப கரக்டா சூட் ஆகியிருக்கு. அஜித் குமாரோட படத்துக்குனு ஒரு தனி மார்க்கெட் நம்ப தமிழ் சினிமா Industry-ல இருக்கு. அவரோட படம் வரப்போதுனா அந்த படத்துக்குனு ஒரு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இப்போ வரைக்கும் இருந்துட்டேதான் இருக்கு.
Bike Driving-ல ராஜாவா, Car Chasing-ல ராஜாதி ராஜாவா, Acting-ல தலயா நம்மள எப்பவும் சந்தோஷப்படுத்திட்டே இருக்காரு. வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், வலிமை இப்படி இவரு நடிச்ச முக்காவாசி படத்துக்கு டைட்டில் V-ல தான் Start ஆகியிருக்கு. எப்புடியோ வலிமைக்கு அப்புறம் V-ல டைட்டில் வைக்காம, “துணிவு”னு வச்ச உடனே அஜித் ரசிகர்கள் பயங்கர ஹேப்பி .
“விஸ்வாசம்” படத்துக்கு அப்புறம் பொங்கலுக்கு துணிவு ரிலீஸ் ஆகுதுனு சொன்னதும், அஜித் ரசிகர்கள் “இது தல பொங்கல்டா” அப்படினு செம்மையா துணிவு படத்த கொண்டாடி தள்ளிட்டாங்க. வலிமை படத்துக்கு அப்டேட்டே விடாம அதை ஒரு Promotion ஆக்கி படத்த ரிலீஸ் பண்ணுனாங்க.
ஆனா அதுக்கு ஆப்போசிட்டா துணிவு படத்துக்கு அப்டேட் மேல அப்டேட் கொடுத்துட்டே இருந்தாங்க. துணிவு படத்துல Bank Robbery-தான் அஜித் பண்ணப்போறாருனு டிரைலர் பார்த்த எல்லாருக்குமே தெரிஞ்சிருக்கும். ஆனா வெறும் Bank Robbery-அ மட்டும் படமா வெக்காம அதுல சென்டிமென்ட் சீன் கொண்டு வருவாங்கன்னு யாருமே Expect பண்ணியிருக்க மாட்டாங்க.
பயங்கரமான மாஸ்டர் Plan போட்டு படத்த அடுத்த Level-க்கு எடுத்துட்டு போகிட்டாரு Director H.வினோத். நம்ம அஜித் குமார்க்கு Salt & Pepper Look எப்பையுமே வேற லெவல்ல Suit ஆகும். அதும் இந்த படத்துல அவரு போட்டுட்டு வர White Shirt-க்கு இன்னமும் கிளாசிக் லுக்கா இருந்தாரு. அப்படியே ஹீரோயின் Side வந்தா மஞ்சு வாரியர் அஜித்துக்கு Equal ஆனா ஒரு Acting பண்ணிருப்பாங்க. அதுலையும் Boat-ல போறப்ப M134 Minigun Handling பண்ணுவாங்க பாருங்க அடிப்பொலியா இருக்கும்.
இந்த படத்துல முக்கியமான கதாபாத்திரம் பண்ணுன ஜான் கொக்கன்(வில்லன்), பாவனி ரெட்டி, அமீர், சிபி புவனசந்திரன், தர்ஷன் எல்லாருமே ரொம்ப நல்லா நடிச்சிருப்பாங்க. துணிவு படத்துக்கு முழுமையான உயிர் கொடுத்தது இசையமைப்பாளர் ஜிப்ரான் தாங்க.
அஜித் நடந்து வர மாஸ் சீனா இருக்கட்டும், குடும்பத்த காட்டுறப்ப வர சந்தோஷம், சோக காட்சியா இருக்கட்டும் மியூசிக் ரொம்ப அழாக Workout ஆகியிருக்கு. ராக்ஸ்டார் அனிருத் “சில்லா சில்லா” பாட்டு இந்த படத்துல பாடிருக்காரு. அது இந்த படத்துக்கு Extra Boostup ஆகிருச்சு.
ரேன்ட்ட கொஞ்சம் கேளு, அப்புறம் காக்கா கதை பாட்டுலாம் பாடி சூப்பர் ஹிட் ஆனா சிங்கர் வைசாக் “காசேதான் கடவுளடா” பாட்டு பாடியிருக்காரு. இந்த படத்துல எல்லா பாட்டுமே செம்ம ஹிட். அதே மாதிரி துணிவு படமும் சூப்பர் டூப்பர் Hit-ங்க.