ATTACK பண்ண படம், ATTRACT பண்ண படம், அட்டகாசமான படம்! – இது வாரிசு ஸ்டைல். பல குடும்பங்களில் விஜய் வாரிசாக மலர்ந்த நாள் இன்று. இந்த படத்தில் வரும் வசனம் போல் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக வாரிசு 2023 பொங்கலுக்கு விருந்தாக கிடைத்தது. ஜெய், அஜய், விஜய் னு இந்த கதாபாத்திரங்கள் பெயர்களுக்கே ஸ்பெஷல் கிரேடிட்ஸ் இருக்கு. இயக்குனர் வம்சியுடன் இளைய தளபதி கைகோர்த்தது ஏன்?
இதுக்கு பதில் FAMILY AUDIENCE-க்கு திருப்திகரமான ஒரு படம் கிடைக்கதான்னு சொல்லலாம். இதென்னப்பா சீரியல் கதை… இதை படம்னு சொல்றாங்க அப்டினு நிறைய விமர்சனங்கள் வந்திருந்தாலும் மக்கள் கிட்ட வாரிசுக்கு கிடைச்ச வரவேற்பு அமோகம் தான். ஆனா இந்த சீரியல் ட்ரோல்’க்கு முற்றுப்புள்ளி வச்சதும் இயக்குனர் வம்சி தான். கிண்டல் பண்றங்கனு உடைஞ்சு போகம சீரியல் வேலை பற்றி ஆதங்கத்துடன் பொறுப்பான ஒரு பதில் சொல்லி இருந்தார்.
இந்த செயலுக்கு நல்ல மரியாதையை சம்பாதிச்சாருனு தான் சொல்லணும். பிரமாண்டமான வீடு, கார்னு ஆடம்பர வாழ்க்கையை SCREENPLAY-ல அற்புதமா காட்சிப்படுத்தினது அவ்ளோ சிறப்பு. கோடீஸ்வர அப்பாவின் சொந்த தொழில், அவர் மகனோட இஷ்டப்பட்ட வேலை, இதுல ஏற்படுற ஈகோ Clash இந்த வரிக்குள்ள கதையை அழகா கொண்டுவந்தாங்க.
அப்பாகாக ஈகோவ பிரேக் பண்ண விஜய், அம்மாவுக்காக பேசின வசனங்கள் எல்லார் வீட்ல இருக்கும் அம்மாக்களுக்கும் பொருத்தமா இருக்கும். ”எல்லாருக்காகவும் யோசிக்கிற அம்மாவுக்கு என்ன வேணும்னு வீட்ல இருக்க யாரும் நினைச்சு பாக்குறது இல்ல’ அப்டிங்குற பெரிய ரியாலிட்டிய காட்சிப்படுத்திருப்பாங்க. ‘Soul of Varisu’ இந்த அம்மா செண்டிமெண்ட் பாட்டு இப்பயும் நம்மள எமோஷனலா பீல் பண்ண வைக்கும்.
தளபதி திரைப்படங்கள்ல ரசிகர்கள் எதிர்பாக்கறது பாடல்கள் தான். வெறும் மியூசிக் போட்டு விஜய் ஸ்டெப் போட்டாலே அது காலத்துக்கும் ஹிட் அடிக்கும். இளையதளபதி விஜய்க்கு இசை அமைப்பாளர்னா அது ரஹ்மான், அனிருத் தான்னு ஆவலோடு காத்துகிட்டு இருந்த ரசிகர்களுக்கு ஷாக் அப்டேட் ஒன்னு படத்தோட டீம் குடுத்தாங்க. அதுதான் இசை அமைப்பாளர் தமன் தளபதி 66 படத்தோட இசையமைப்பாளர் அப்டிங்குறது.
ரசிகர்களுக்கு அப்போ Interest கொறைஞ்சாலும் பாட்டு ரிலீஸ் ஆனதும் கொண்டாட்டத்துக்கு பஞ்சமே இல்ல. நடிகர் ஷாம்க்கு இந்த திரைப்படம் ரொம்ப ஸ்பெஷல்… ஏன் அப்டினா, அவரோட அறிமுகம் இளையதளபதி விஜய்யின் குஷி திரைப்படத்தில் தான். திரும்ப ஒரு நல்ல ரோல் இளையதளபதி கூட நடிக்க கெடச்சா அத யார் தான் மிஸ் பண்ணுவாங்க. இளையதளபதி டான்ஸ்காக ஒரு ரசிகர் பட்டாளம் எப்போதும் இருக்கு.
அதுக்கு குறை இல்லாம பாத்துக்கிட்டாங்க னு கண்டிப்பா சொல்லலாம். 2023 ட்ரெண்டிங்ல தளபதி ஓட ரஞ்சிதமே ஹிட் அடிச்சது. இவருக்கு வயசே ஆகாதா? எப்படி இவ்ளோ சூப்பரா டான்ஸ் ஆட முடியுதுனு தளபதி ரசிகன் இல்லாதவர்களும் வாவ்-னு சொன்ன மொமெண்ட் இருந்துச்சு.
அப்பா ஓட ஹெல்த், அம்மா ஓட ஆசை, சகோதரர்களோட போட்டி, ஹீரோ ஓட Family Balance இதெல்லாத்தையுமே சரியான அளவுல கொடுத்ததுதான் சீரியல்னு எல்லாரையும் பேச வச்சது. அதுவே படத்தோட வெற்றிக்கும் வழியா அமைஞ்சுது. ஆனா ஹீரோயின் என்ன பண்றாங்க படத்துல, என்ன ரோல் இருக்குனு தோணும். ஆனா உண்மை என்னனா அவங்களுக்கு குடுத்த ரோல் அவங்க நல்லா பண்ணாங்க. நேரம் குறைக்க சில காட்சிகளை குறைக்கப்பட்டதா அப்போ சொன்னாங்க.
அதெல்லாம் இருந்திருந்தா படத்துல ராஷ்மிகா கதாபாத்திரம் இன்னும் பேசும் படியா இருந்துருக்குமோ என்னமோ! குஷ்பு இந்த படத்துல இருந்ததா சில காட்சிகள் சார்ந்த புகைப்படங்களையும் நாம பார்த்தோம். இத திரைல எதிர் பார்த்தவர்களுக்கு ஏமாற்றம் தான். ஆனா இந்த காட்சி இடம் பெற்றிருந்தால் மின்சார கண்ணா திரைப்படத்துக்கு பிறகு குஷ்பு & இளையதளபதி இவங்க காம்போவ என்ஜாய் பண்ணிருப்போம்.
படம் ப்ரோமோஷன்ல தில் ராஜு அவர்கள் சொன்ன மாதிரி தாங்க… டான்ஸ் வேணுமா இருக்கு, பாட்டு வேணுமா இருக்கு, Fight வேணுமா இருக்கு, ஆகமொத்தம் படம் யாருக்காக எடுக்க பட்டதோ அவங்களுக்கு விருந்தா இருந்துச்சு! வெற்றியும் கிடைச்சுது. சில வசனங்கள் படத்துல திணிச்சிருக்காங்க மொக்க னு இருந்த ரிவியூ, பெரிதும் எல்லார் மனசுலயும் இருந்த கருத்து தான். சீரியல் சீரியல் னு சொல்லியே படத்தை ஹிட் பண்ணவங்களுக்கு தான் நன்றி சொல்லணும்.