Cinema News Stories

10 years of சமுத்திரக்கனியின் “நிமிர்ந்து நில்”

பொதுவா சிங்கள் ஆக்ட்டிங்ல ஆக்ஷன் படம் அப்டினாலே ரொம்ப விறுவிறுப்பா இருக்கும். அதுவும் ஜெயம்ரவி அவர்கள் டபுள் ஆக்ட்டிங்ல நடிச்சிருக்காரு, லவ்வர் பாயா பாத்த ஜெயம்ரவி அவர்களுக்கு பேராண்மை படத்துக்கு அப்புறமா சமூக அக்கறை கொண்ட ஒரு படமா நிமிர்ந்து நில் இடம்பெற்று இருக்கு.

சமுத்திரகனி என்கிற பெயரை கேட்டாலே அவரோட இயல்பான நடிப்பு நியாபகம் வரும். அவருக்குனு ஒரு ரசிகர் பட்டாளம், கை தட்டு, விசில் சத்தம்ன்றது தாண்டி அவரோட இயக்கத்துல வர படத்துக்குனு தனி fanbase இருக்கு. 2011-ல இவர் இயக்குன போராளி படத்துக்கு அடுத்த தமிழ் படமா நிமிர்ந்து நில் அமைந்து இருக்கு.

ஜெயம் ரவி, அமலா பால், ராகினி திவேதி, கௌரி நந்தா, சூரி, நாசர், சரத் குமார், கோபிநாத் அவர்களோட நடிப்புல சமுத்திரக்கனி அவர்களோட இயக்கத்துல ஜி.வி.பிரகாஷ் குமார் அவர்களோட இசைல 2014-ல வெளிவந்தது நிமிர்ந்து நில் திரைப்படம். அதே சமயத்துல Nani அவர்ளின் தெலுங்கு படம் Janda pai kapiraju வெளிவந்துச்சு.

ஹரிச்சந்திரன் மாதிரி உண்மைய மட்டுமே பேசுற ஒருத்தர்… நா மட்டும் பேசுனா எப்படி? என்ன சுத்தி இருக்கவங்களும், சுத்தி இருக்க விஷயமும் Mr. Perfect-ஆ தான் இருக்கணும்னு எதிர் பாக்குற அம்பி கேரக்டர் மாதிரியே தான் அரவிந்தன காட்டி இருப்பாரு.

ஒரு ஆஸ்ரமத்துல படிச்சு IT கம்பெனில வேல செய்ற அரவிந்தன்(Jayam Ravi) பைக்ல எல்லா பேப்பரும் இருந்தும் லஞ்சம் கேட்ட டிராபிக் போலீஸ மாட்டி விடுவாரு. அங்க சூடு புடிக்குது கத, இல்லாத ஒருத்தர காசு குடுத்தா உருவாக்க முடியும்னு உருவாக்கி ஒரு டிவி ஷோல வெளிக்கொண்டு வந்து தண்டன வாங்கி கொடுப்பாரு. அதுக்கான Revenge, அது எல்லாத்தையும் தாண்டி எப்படி நிமிர்ந்து நிறுக்குறார்ன்றது தான் Climax.

சமுத்திரக்கனி வசனங்களின் மன்னர் அப்டினு சொல்லலாம், இந்த படத்துலயும் வசனங்கள் மூலம் கருத்தை சொல்லி இருக்காரு. Perfect-அ இருக்க பசங்கள பொண்ணுங்களுக்கு புடிக்காது. ஆனா அமலாபால்க்கு ரொம்ப புடிக்கும், தொரத்தி தொரத்தி லவ் பண்ணுவாங்க. காமெடி தாண்டி நடிப்பை காட்ட ஒரு படமா சூரி அவர்களுக்கு அமைந்தது இந்த படம்.

ஆடி மாசம் மனைவி அம்மா வீட்டுக்கு போனாலும்… அடுத்த மாசம் உனக்கு பஞ்சாயத்த வச்சாலும்… Don’t worry… Don’t worry be happy ன்ற கானா பாலா அவர்களோட பாடல் செம்ம ஹிட். மொத்தமா எல்லாம் கலந்த கலவையாக பாதி அம்பி… பாதி அந்நியனா காட்டி இருக்காரு சமுத்திரக்கனி அவர்கள். இப்படி ஒரு பையன் நம்ப சமுதாயத்துல இருந்தா எப்படி இருக்கும்?

இன்னையோட சமுத்திரக்கனி அவர்களின் ‘Nimirundhu Nil’ திரைப்படம் வந்து 10 வருடம் ஆகுது.

Article BY RJ Nandhu

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.