வருஷம் 2010 மொபைல் போன்லாம் நம்ம கைல பெருசா இல்லாத காலம், பொழுதுபோக்குக்கு விளையாடுவோம், ரேடியோ கேட்போம், டிவி பார்போம் இப்படி தான் போய்ட்டு இருக்கும் 90s kids வாழ்க்கை.
இப்ப வரை 90s kids வாழ்க்கைல மறக்க முடியாத பல நினைவுகளுக்கு சொந்தகாரங்கனா சன் டிவி தான். அப்படி சன்டிவி பார்த்துட்டு இருந்த பலருக்கும் பிடிச்ச ஒரு விஷயம் சன் பிக்சர்ஸ் வெளியீட்டுள வர படங்களோட promo. அது போல 2010ல சன் டிவி, கே டிவி, சன் மியூசிக் எல்லா சேனல்லையும் வந்த promo “அ அ அ ஆ இ ஈ னு மறதி பாட்டு , பட்டு பட்டு பட்டாம்பூச்சி, சொல்பேச்சு கேட்டகாத சுந்தரி“னு… தில்லாலங்கடி படத்தோட promo.
தில்லாலங்கடி ஜெயம் ராஜா இயக்க, யுவன் இசையமைக்க, ஜெயம் ரவி, தமன்னா, சந்தானம், வடிவேல்னு நம்ம favorite நடிகர்கள் எல்லாரும் peakல இருந்த நேரத்துல ரிலீஸ் ஆச்சு. நமக்கு தெரிஞ்ச வேலைக்கு போற சிலர் கிட்ட கேட்டு பாருங்களேன் ஒருத்தர் பல வருஷமா ஒரே வேலைல இருப்பாரு, ஒருத்தர் ஒரு வருஷத்துக்கு ஒரு company மாறுவாரு.
ஆனா தில்லாலங்கடி படத்துல, நம்ம ஹீரோ ஜெயம்ரவி வேலைல கிக் இல்லனா ஒரு நாள்ல கூட மூணு வேலைக்கு மாறுவாரு. அப்படிப்பட்ட ஹீரோ தன்னை லவ் பண்ணாதனு சொல்லி தமன்னாவ torture பண்ணுவாரு. ஒரு பக்கம் படத்தோட முதல் பாதி ஜெயம் ரவி தமன்னா லவ் ஸ்டோரி, வடிவேல்- தமன்னா- ஜெயம் ரவியோட லவ் காமெடினு படம் போய்ட்டு இருக்கும்.
ஒரு கட்டத்துல ஜெயம்ரவிய லவ் பண்ற தமன்னா ஒரு நிலையான வேலை இருக்கணும்னு கண்டிஷன் போட, கிக் வேணும்னு அதை ஜெயம்ரவி follow பண்ணாததால தமன்னா பிரேக் பண்ணி, அப்பா அம்மா பார்த்து வைக்குற மாப்பிள்ளையான ஷாம் கூட மலேசியால நிச்சயம் பண்ணிடுவாங்க. சில மாசம் கழிச்சு மலேசியால மறுபடியும் தமன்னாவும் ஜெயம்ரவியும் மீட் பண்றாங்க.
ஆனா இந்த முறை ஜெயம்ரவி மறதி வந்தவரா இருக்காரு. அந்த மறதி வந்த ஜெயம்ரவியோட டாக்டர் தான் ஏற்கனவே மறதியா இருக்க சந்தானம். தமன்னா தன்னோட முன்னால் காதலை பத்தி ஷாம் கிட்ட சொல்ல, ஷாம் தன்னோட குறிக்கோள் என்னனு தமன்னா கிட்ட சொல்றாரு. ஷாம் ஒரு மிகப்பெரிய திருடனை தேடிட்டு இருக்காரு. ஒரு கட்டத்துல அந்த திருடன் ஜெயம்ரவினு தெரிய வருது. ஜெயம்ரவி ஏன் திருடனா இருக்காரு?
எதுக்காக பணம் திருடுறாரு? அதெல்லாம் படத்தோட மீதி பாதி. தமன்னா ரசிகர்களுக்கு தில்லாலங்கடி படம் ஒரு செம்ம ட்ரீட்னு சொல்லலாம் படம் முழுக்க ஹீரோக்கு இணையா தமன்னாக்கும் screen space இருக்கும். தில்லாலங்கடி படத்துக்கு பெரிய பலமே காமெடி ட்ராக் தான், ஜாக்கியா வர வடிவேல் , டாக்டர் புட்டி பால்லா வர சந்தானம் இவங்க தான் இன்னைக்கு வர நாம தில்லாலங்கடி படம் பத்தி பேச முக்கிய காரணம்.
தளபதி விஜய் clap board அடிச்சு துவங்கின தில்லாலங்கடி படம், ரசிகர்கள் எல்லோரும் விசில் அடிச்சு கொண்டாடின வெற்றி படமா அமைஞ்சது. இப்பவும் யூடியூப்ல தில்லாலங்கடி படத்தோட காமெடி இருக்கு போய் பாருங்க செம்ம கலகலப்பா இருக்கும். இன்னைக்கு தில்லாலங்கடி படம் ரிலீஸ் ஆகி 14 வருஷம் ஆச்சுனு நினைக்கும் போது தான் 90s kidsக்கு வயசு ரொம்ப வேகமா ஓடுதுனு தோணுது.