பண்ணையபுரதில் auto ஓட்டுநராக, எளிமையான மனிதராக இராதாகிருஷ்ணன் (விஜய் சேதுபதி) மற்றும் அவரது மனைவி சாவித்திரி (காயத்ரி). மகன் மற்றும் மகளை தனியார் பள்ளியில் படிக்கவைக்க நினைக்கும் இராதாகிருஷ்ணன் அதற்கு அதிக பணம் தேவைப்படும் என்பதால் real estate தொழிலில் இறங்குகிறார்.தொழிலில் நம்பியவர்களின் மோசடியில் சிக்கிக்கொள்ளும் இராதாகிருஷ்ணன் ஊர் மக்களிடம் சிக்காமல் இருக்க குடும்பத்தை விட்டுவிட்டு வெளியூருக்கு ஓடிப்போகிறார்.
ஓடிப்போன இராதாகிருஷ்ணனின் நோக்கம் என்ன, அவர் எடுக்கும் முடிவுகள் என்ன , மீண்டும் அவர் தன் குடும்பத்துடன் இணைந்தார் என்பதை சொல்வதே இந்த மாமனிதன். விஜய் சேதுபதி தன் இயல்பான நடிப்பில் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மீறி கண்ணீர் வெடிக்கும் பல தருணங்களை ஏற்படுத்தி இருந்தார்.
எளிய மனிதர்களின் கதையை பெரும்பாலும் கையில் எடுக்கும் இயக்குனர் சீனு ராமசாமி, இராதாகிருஷ்ணன் என்னும் மாமனிதரின் கதையையும் கையில் எடுத்து திரையில் ஓர் காவியம் தீட்டி இருந்தார்.மேலும் தென்மேற்கு பருவ காற்று,இடம் பொருள் ஏவல், தர்மதுரை படங்களை தொடர்ந்து விஜய் சேதுபதி – சீனு ராமசாமி கூட்டணியில் ‘மாமனிதன்’ நான்காவது முறையாக மனதில் நின்றது.
தந்தையும் மகனும் என இளையராஜாவும் – யுவன் சங்கர் ராஜாவும் பின்னணி இசையில் கவனம் ஈர்த்தனர். ஒளிப்பதிவாளர் செல்வகுமார் தேனி மாவட்ட வாழ்வையும், கேரளாவின் ஆலப்புழா அழகையும் கண் முன் நிருத்தி இருந்தார். அடிதடியும் வன்முறையும் நிறைந்திருக்கும் திரைப்படங்களுக்கு மத்தியில் எதார்த்தமான மனிதம் பேசும் ‘மாமனிதன்’ இரண்டு வருடங்கள் கடந்தும் நம் மனதில் நீங்காமல் நிற்கின்றன!!