இந்த கட்டுரையானது 2019-ஆம் ஆண்டு திரைக்கு வந்த பத்து சிறந்த படங்களை பற்றிய தொகுப்பாகும். உங்கள் அபிமான அந்த பத்து திரைப்படங்கள் என்னென்னவென்று படித்து மகிழுங்கள்.
கைதி (2019)
கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய வெற்றிப்படம் தான் கைதி. தீபாவளி ரிலீஸாக வெளிவந்த இப்படம் அணைத்து தரப்பு ரசிகர்களையும் திருப்தி படுத்தும் வகையில் அமைந்தது.
கார்த்தியின் எதார்த்தமான நடிப்பு பாராட்டும் வகையில் அமைந்தது.
இப்படத்தில் கார்த்தி தனது வெறித்தனமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கார்த்தியின் படங்களுள் ரூபாய் 100 கோடி வசூல் செய்த முதல் படம் கைதியாகும். இப்படத்தில் அர்ஜுன் தாஸ், நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.
கோமாளி
90’s கிட்களின் அழகான நினைவுகளை ஞாபகப்படுத்தும் படமாக கோமாளி படம் அமைந்திருந்தது. ஜெயம் ரவியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக இப்படம் அமைந்தது.
16 வருடம் கோமாவில் இருந்த ஒருவனின் வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பதை அழகாக இப்படம் வெளிக்காட்டி இருக்கும்.
கோமாளி திரைப்படத்தில் காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு நடித்துள்ளனர். இந்த ஆண்டின் ஒரு சிறந்த Entertainer படமாக கோமாளி அமைந்தது.
நேர் கொண்ட பார்வை (2019)
பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளை பற்றியும், பெண் சுதந்திரத்தை பற்றியும் விரிவாக பேசி இருக்கும் படம் தான் தல அஜித் நடிப்பில் வெளிவந்த நேர் கொண்ட பார்வை. இப்படம் ஹிந்தி படமான பிங்க் திரைப்படத்தின் ரீமேக் ஆகும்.
இப்படத்தில் தல அஜித் நேர்மையான வக்கீலாக வலம் வந்திருப்பார். இப்படத்தில் ரங்கராஜ் பாண்டே, ஷ்ரதா ஸ்ரீநாத், அபிராமி வெங்கடாச்சலம் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் அஜித்துக்கு வெற்றிப் படமாக அமைந்தது.
அசுரன்
வாழ்வியலின் எதார்த்தத்தை ரசிகர்களுக்கு அவர்களுக்கு ஏற்ற பாணியில் படமாய் தொகுத்து கொடுப்பதில் இயக்குனர் வெற்றிமாறன் ஒரு கில்லாடி.
அவ்வகையில் தனுஷின் அசுர நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் இந்த ஆண்டின் சிறந்த படங்களுள் சிறப்பான படமாய் அமைந்தது.
தனுஷ் – வெற்றிமாறன் கூட்டணி என்றாலே அது வெற்றி படம் தான் என்ற நம்பிக்கையை ஒரு படி மேலே சென்று அசுரன் திரைப்படம் நிரூபித்துள்ளது. தனுஷின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக அசுரன் அமைந்தது.
பேட்ட
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் நடிப்பில் சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய படம் பேட்ட.
இத்திரைப்படம் ரஜினி ரசிகர்களுக்கு பொங்கல் விருந்தாய் அமைந்தது. முழுக்க முழுக்க மாஸ் படமாக உருவாக்கப்பட்ட பேட்ட படத்தை ரசிகர்கள் ஆரவாரத்துடன் ஏற்றுக்கொண்டனர்.
பேட்ட திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பாபி சிம்ஹா, பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், சசிகுமார், த்ரிஷா, சிம்ரன் என பலர் நடித்துள்ளனர். தலைவரின் ரசிகர்களுக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு சிறந்த மாஸ் Entertainer ஆக பேட்ட திரைப்படம் அமைந்தது.
பிகில்
இந்த தீபாவளி தளபதி ரசிகர்களுக்கு தாறு மாறான தீபாவளியாய் அமைந்தது. தளபதி விஜய் மற்றும் இயக்குனர் அட்லீயின் வெற்றிக்கூட்டணியில் அமைந்த மூன்றாவது திரைப்படம் இதுவாகும். இப்படத்தில் பெண்களின் விளையாட்டு வாய்ப்பை மையமாக கொண்டு கதை நகரும்.
பிகில் திரைப்படத்தில் நயன்தாரா, விவேக், இந்துஜா ரவிச்சந்திரன், வர்ஷா பொல்லம்மா, ஆனந்த் ராஜ், யோகி பாபு என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. பீகிள் திரைப்படம் உலகமெங்கும் ருபாய் 300 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் டீலக்ஸ்
பல்வேறு கதைகளை இணைத்து கோர்வையாய் அமைக்கப்பட்ட படம் தான் சூப்பர் டீலக்ஸ். இப்படத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, பாஹத் பாசில், ரம்யா கிருஷ்ணன் என பலர் நடித்துள்ளனர். இதில் விஜய்சேதுபதி திருநங்கையாக நடித்திருப்பார்.
ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜன் தான் இப்படத்தையும் இயக்கினார். பல்வேறு கோணங்களில் பல்வேறு விதமாக தெரியும் இப்படம் அனைவரும் ரசிக்கும் வகையிலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
ஒத்த செருப்பு
நடிகர் ராதாகிருஷ்ணன் பார்த்திபனின் தனித்துவமான தனிமையான நடிப்பில் வெளிவந்த படமே ஒத்த செருப்பு. இப்படத்திற்காக பார்த்திபனை பாராட்டாதவர்களே கிடையாது. இப்படம் முழுக்க பார்த்திபன் மட்டுமே நடித்திருப்பார்.
ஒரு தனி நபர் மட்டுமே படம் முழுக்க நடித்திருப்பது தமிழ் சினிமாவில் இதுவே முதல் முறையாகும். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இதுபோன்ற வித்யாசமான முயற்சியை மக்கள் ஏற்றுக்கொண்டது தமிழ் சினிமா ரசிகர்களின் நியாயமான ரசிக்கும் தன்மையை வெளிப்படுத்துகிறது.
தடம்
அருண் விஜய் இரட்டை வேடத்தில் நடித்து வெளிவந்த படம் தான் தடம். மகிழ் திருமேனி இயக்கத்தில் வெளிவந்த இப்படம் பலரால் பாராட்டப்பட்டது. அருண்விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் ஒரு முக்கிய படமாக இப்படம் அமைந்தது.
இப்படம் ஒரு கொலை வலக்கை விசாரிக்கும் வகையில் அமைந்திருக்கும். இப்படத்தில் வரும் திருப்புமுனைகளும் திரைக்கதையும் நம்மை கூர்மையாக கவனிக்க வைப்பதோடு சேர்த்து ரசிக்கவும் வைத்திருக்கிறது.
நம்ம வீட்டு பிள்ளை (2019)
சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிப்பில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் பாண்டிராஜ் இயக்கிய படம் தான் நம்ம வீட்டு பிள்ளை.
சிவகார்த்திகேயனுக்கு ஏற்ற தலைப்பில் இப்படம் வெளிவந்து அணைத்து குடும்ப ரசிகர்களையும் திருப்தி படுத்தியது.
இப்படத்தில் அண்ணன் தங்கை பாசத்தை அனைவருக்கும் உணர்த்தும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கும். இப்படத்தை பலரும் பாசமலர் இரண்டாம் பாகம் என்று புகழ்ந்தனர்.