Specials Stories

2019-ஆம் ஆண்டின் சிறந்த பத்து பாடல்கள்

இந்த கட்டுரையானது 2019-ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த பத்து பாடல்களை பற்றிய தொகுப்பு.

வேறெதுவும் தேவை இல்லை – கடாரம் கொண்டான் (2019)

கடாரம் கொண்டான் படத்தில் அமைந்த வேறெதுவும் தேவையில்லை நீ மட்டும் போதும் என்ற பாடல் இந்த ஆண்டின் அனைவரும் விரும்பும் மெல்லிசை பாடலாக அமைந்தது.

இப்பாடல் கணவன் தன மனைவியை நேசிக்கும் உணர்ச்சியை வெளிக்காட்டும் வகையில் இருக்கும்.

சித் ஸ்ரீராமின் இனிமையான குரலில் அமைந்த இப்பாடல் அனைவரின் Playlist-டிலும் இடம்பிடித்த பாடலாக அமைந்துள்ளது.

மரண மாஸ் – பேட்ட (2019)

சூப்பர்ஸ்டார் ரஜினி படம் என்றாலே Intro பாடல்களுக்கு தனி முக்கியத்துவம் கொடுத்து அமைக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் பேட்ட படத்தின் மரண மாஸ் பாடல் கேட்போரை சிலிர்க்க வைக்கும் வகையில் அமைந்திருக்கும்.

அனிருத் இசையில் அமைந்த இப்பாடலின் சில வரிகளை S.P.B பாடியிருப்பது இப்பாடலுக்கு மேலும் வலுசேர்க்கும்.

இணையே – தடம் (2019)

அருண் விஜய் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கிய தடம் திரைப்படத்தில் அமைந்த இணையே பாடல் காதலர்களுக்கு விருந்தாய் அமைந்தது. இப்பாடலை சித் ஸ்ரீராம் மற்றும் பிரேமலதா இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

இந்த ஆண்டில் வெளிவந்த காதல் பாடல்களில் இணையே பாடல் அதற்கென ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளது.

கோடி அருவி – மெஹந்தி சர்க்கஸ் (2019)

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் மெலடி பாடல்கள் எப்போதுமே மனம் கவரும் வகையில் இருக்கும். அந்த வகையில் மெஹந்தி சர்க்கஸ் படத்தில் அமைந்த கோடி அருவி கொட்டுதே பாடல் இந்த ஆண்டின் இனிமையான பாடலாய் அமைந்தது.

பிரதீப் குமார் மற்றும் நித்திய ஸ்ரீ அவர்களின் குரலில் அனைவரையும் காதல் உணர்வில் ஆழ்த்தும் பாடலை இப்பாடல் அமைந்தது.

வெறித்தனம் – பிகில்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் தளபதி விஜயின் அதிரடியான குரலில் வெளிவந்த பாடல் தான் வெறித்தனம். இப்பாடல் கேட்கும் அனைவரையுயம் குத்தாட்டம் போட வைத்தது. இப்பாடலில் வரும் வரிகளும் விஜய் ரசிகர்களை கவரும் வகையில் இருந்தது.

இப்பாடல் கேட்பதற்கு மட்டுமின்றி பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். விஜயின் நடனம் வழக்கம் போல் இந்த பாடலிலும் வெறித்தனமாக அமைந்திருக்கும்.

கண்ணான கண்ணே – விஸ்வாசம் (2019)

டி.இமான் இசையில் சித் ஸ்ரீராமின் மென்மையான குரலில் அனைவரையும் பாச மலையில் ஆழ்த்திய பாடல் தான் கண்ணான கண்ணே.

தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஆன பாசத்தை அழகாக சொல்லி இருக்கும் இப்பாடல் அணைத்து அப்பாக்களுக்கும் Favorite பாடலாய் அமைந்தது.

“புண்ணான நெஞ்சை பொன்னான கையால் பூ போல நீவ வா” போன்ற வரிகளின் ஆழமான அர்த்தங்கள் கேட்போர் கண்களில் பாசக்கண்ணீர் வர வைத்தது.

ஹாய் சொன்னா போதும் – கோமாளி

கோமாளி படத்தில் அமைந்த நீ ஹாய் சொன்னா போதும் பாடல் அணைத்து 90’s கிட்களயும் துள்ளித்திரிய வாய்த்த பாடலாய் அமைந்தது. ஹிப் ஹாப் தமிழா ஆதியின் இசையில் நம் பள்ளி பருவத்தை ஞாபகப்படுத்தும் பாடலாய் இப்பாடல் இருக்கிறது.

எங்க அண்ணன் – நம்ம வீட்டு பிள்ளை (2019)

சன் பிச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த நம்ம வீட்டு பிள்ளை படத்தில் அமைந்த எங்க அண்ணன் பாடல் பட்டி தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.

இப்பாடலின் வரிகள் அண்ணன் தங்கச்சி பாசத்தை வெளிக்காட்டும் வகையில் இருக்கும்.”எங்க அண்ணன் அன்பை அள்ளி தெளிக்கிறதில் மன்னன்”, போன்ற வரிகள் அணைத்து அண்ணன்களுக்கு தங்கைகள் சமர்ப்பிக்கும் வரிகளாக அமைந்தது.

யாரடியோ – கொரில்லா

ஜீவா நடித்த கொரில்லா படத்தில் அமைந்த யாரடியோ பாடல் கேட்பதற்க்கு புதுமையாகவும் இனிமாயாகவும் இருந்தது. சாம் C.S இசையில் சித் ஸ்ரீராம் பாடிய இப்பாடல் ரசிகர்கள் கொண்டாடும் விதத்தில் அமைந்துள்ளது.

சமீப காலங்களில் இதுபோன்ற காதல் பாடல்களை மக்கள் அதிகமாக ரசித்து கேட்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேரளா சாங் – நட்பே துணை (2019)

இந்த ஆண்டு வெளிவந்த பாடல்களில் நம்மை அதிகம் துள்ள வாய்த்த பாடல்களுள் ஒன்று நட்பே துணை படத்தில் அமைந்த கேரளா சாங். கேரளா சண்டி மேளமும் தமிழக இசையும் சேர்ந்த பாணியில் இப்பாடல் அமைந்திருக்கும்.

கேரள பெண்களை காதலிக்கும் தமிழ் நாட்டு ஆண்களுக்கு ஏற்றவாறு இப்பாடல் அமைந்திருக்கும்.

About the author

alex lew