உலகத்துல எத்தனையோ Search Engines இருந்தாலும் நம்ம ஜெஸ்ஸி Google தான். உலகத்துல பெரும்பாலானோர் பயன்படுத்தக்கூடிய No.1 Search Engine Google மட்டுமே. இந்த நம்பர் 1 Search Engine ஆன கூகுள்ல நாம நிறைய விஷயங்கள் தேடியிருப்போம். அப்படி பாத்தம்னா எக்கச்சக்க விஷயங்கள் இருக்கு.
அதயெல்லாம் பத்தி பேசனும்னா மாசக்கணக்காகும். இப்ப கூகுளே நாம தேடின பல விஷயங்கள வகைப்படுத்தி Top 10 List கொடுத்திருக்காங்க. அதுவும் உலகத்துல, ஒவ்வொரு நாடுகள்ல Top 10 Google Search-னு பிரிச்சு List போட்டு குடுத்துருக்காங்க. அதுல நாம இப்ப என்ன பாக்க போறோம்னா… இந்தியால Near me அப்படிங்குற Category-ல மக்கள் தேடியிருக்க Top 10 விஷயங்கள பத்தி பாக்க போறோம்.
1) Covid vaccine near me
2022 Google Search-ல Near Me அப்படிங்குற Category-ல முதல் இடம் பிடிச்சுருக்க தேடல் Covid vaccine. கொரோனா தடுப்பூசி நம்ம இருக்க இடத்துக்கு பக்கத்துல எங்க போடுறாங்க, Vaccination Centre எங்க இருக்குனு நிறைய பேர் தேடியிருக்கோம்.
கொரோனா கட்டுப்பாட்டுல முக்கிய பங்களிப்பு இந்த தடுப்பூசிகளுக்கு இருக்கு. அத பத்தி நாம அதிகம் தேடியிருக்கோம் அப்படிங்குறது நமக்கு ரொம்ப ஒரு பெருமையான விஷயம். தடுப்பூசி போட்டவங்களுக்கு Kudoos. போடாதவங்களும் சீக்கிரமே போட்டு முடிச்சுருங்க.
2) Swimming pool near me
இரண்டாவதா இந்திய மக்கள் Near Me-ல தேடியிருக்க விஷயம் Swimming pool. அடேங்கப்பா ஆச்சரியமா இருக்கு. பெரும்பாலும் Cities-ல இல்ல Towns-ல சில இடங்கள்ல தான் நீச்சல் குளங்கள் இருக்கும். அதுலயும் நீச்சல் தெரிஞ்சவங்க பாதி பேர் தான் இருப்பாங்க. பெரும்பாலும் பெண்கள் நீச்சல் தெரியாம இருப்பாங்க. அத தாண்டி நீச்சல் கத்துக்குறதுக்காகவும்,
நீச்சல் தெரிஞ்சும், தெரியாமலும் ஜாலியா இருக்குறதுக்காக, உடற்பயிற்சிக்காக நீச்சல் குளத்துக்கு போறவங்க இன்னும் கம்மியா தான் இருப்பாங்க. அப்படி இருக்கப்ப இந்தியாவுலயே Near Me-ல அதிகம் தேடப்பட்ட இரண்டாவது விஷயமா Swimming Pools இருக்கு அப்படிங்குறது ஆச்சரியமான விஷயம் தான்.
3) Water park near me
3வது விஷயமும் கிட்டத்தட்ட இரண்டாவது விஷயம் மாதிரியான ஒன்னு தான். Water park near me-னு தேடியிருக்காங்க. Swimming Pools-க்கு நாம சொன்ன விஷயங்கள் எல்லாமே இதுக்கும் பொருந்தும். ஆனா Swimming pools-அ விட இதுல Entertainment அதிகமா இருக்கும். அப்படி பாத்தா Swimming pools-அ விட அதிக Facility & Enjoyment இங்க தான் கிடைக்கும். என்ன கொஞ்சம் செலவு அதிகமாகும்.
அதனால இங்க போறவங்க கம்மியா இருப்பாங்க. அதனாலயே முதல்ல கம்மி பட்ஜெட்ல தண்ணில விளையாட நினைக்குறவங்க Swimming pools-அ Choose பண்ணிடுறாங்க போல. அதனால Google Search-ல இந்தியர்களால Near Me-ல அதிகமா தேடப்பட்ட பட்டியல்ல 3வது இடத்த இந்த Water parks பிடிச்சிருக்கு.
4) Movies near me
இந்தியாவில் விலைவாசிய வச்சு பார்க்கும்போது அனைத்து தரப்பு மக்களுக்கும் பொதுவான ஒரு இடம் அப்படினா அது தியேட்டர்ஸ் தான். இந்திய சினிமா தோன்றிய காலத்திலருந்து இன்னைக்கு வர இந்திய வரலாற்றில் பெரிய பெரிய மாற்றங்கள செஞ்சுருக்கு. இந்திய அரசியல் வரலாற்றுல சினிமாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கு.
அதுவும் வட இந்தியாவை விட தென்னிந்தியால இது ரொம்ப அதிகம். இந்தியால தியேட்டருக்கு போய் படம் பார்க்காத மக்கள விரல்விட்டு எண்ணிடலாம். அப்படிப்பட்ட சினிமா குறித்து இந்திய மக்கள் தேடியிருக்காங்க அப்படிங்குறது ஆச்சரியமான விஷயமில்ல. ஆனா அது 4வது இடத்துல இருக்கு அப்படிங்குறது தான் கொஞ்சம் ஆச்சரியமா இருக்கு.
5) Takeout restaurants open now near me
தியேட்டருக்கு எப்படி அனைத்து தரப்பு மக்களும் வந்து போவாங்களோ, அதே மாதிரி அனைத்து தரப்பு மக்களும் வந்து போகக்கூடிய இன்னொரு இடம் Restaurants. வாரத்துல இல்ல மாசத்துல ஒருநாள் குடும்பமாவோ, நண்பர்களோடவோ ஒன்னா சேர்ந்து நல்ல Restaurant போய் சாப்பிடனும் எல்லாருமே நினைப்பாங்க. தியேட்டர்க்கும் இதுக்கும் என்ன வித்தியாசம்னா Restaurants-அ பொருத்தவர அவங்கவங்க பொருளாதாரத்துக்கு ஏத்த மாதிரியான ஹோட்டல்ஸ் போவாங்க.
ஏன்னா ஒவ்வொன்னுக்கு விலைவாசி வேற மாதிரி இருக்கும். Hi Budget-ல இருந்து Low Budget வரைக்கும் நிறைய நல்ல Restaurants நம்ம நாட்ல இருக்கு. இப்படி எல்லாருமே முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய சாப்பாட்டு விஷயம் சம்மந்தப்பட்ட Restaurants பத்தின தேடல் Google Search-ல Near Me-ல இந்தியர்களால தேடப்பட்ட விஷயங்கள்ல 5-வது இடத்த பிடிச்சிருக்கு.
6) Malls near me
வெளியூர்ல இருந்தும் எந்த ஒரு சிட்டிக்கு வரவங்க, Enjoyment-காக போற இடங்கள் பெரும்பாலும் Theaters & Hotels & Shopping இதுதான். அப்படியிருக்கப்போ இந்த மூனுமே ஒரே இடத்துல இருந்தா நம்ம வேலை ரொம்ப சுலபமா முடிஞ்சுரும், அலைச்சலும் இருக்காது. அப்படிப்பட்ட ஒரு இடம் தாம் Malls.
அதனால தான் Malls Near Me-னு நிறைய பேர் தேடியிருக்காங்க போல. ஜாலியா தியேட்டருக்கு போய் படம் பாத்துட்டு, Food Court-ல சாப்டுட்டு, அங்கயே Shopping-ம் முடிச்சுட்டு நிம்மதியா வரலாம். இதுமட்டுமில்லாம இத தாண்டி இன்னும் நிறைய விஷயங்களும் இங்க இருக்கும். So Malls near me, Google Search-ல 6-வது இடத்த பிடிச்சிருக்கு.
7) Metro station near me
இதுக்கு முன்னாடி சொன்ன மாதிரி வெளியூர்ல இருந்தும் எந்த ஒரு சிட்டிக்கு வரவங்களா இருந்தாலும் அவங்களுக்கு ரொம்ப இடைஞ்சலா இருக்கக் கூடிய ஒரு விஷயம் Traffic. City Traffic-னால நிறைய இடங்களுக்கு போக முடியாம நம்ம நேரம் வீணா போய்டும். அப்டி ஆகாம இருக்குறதுக்கு மக்கள் Choose பண்ணக்கூடிய விஷயங்கள் Local Trains & Metro Trains. Traffic-ல மாட்டாம போக வேண்டிய இடத்துக்கு Correct-ஆன Timing-ல போய்டலாம்.
இதுல Local Trains-அ விட Metro Trains இன்னும் சீக்கிரமா போய் சேர்ந்துடும். அதனால தான் பக்கத்துல இருக்க Metro station எது அப்படினு நிறைய பேர் தேடியிருக்காங்க. So Google Search, Near me-ல Metro stations 7வது இடத்த பிடிச்சிருக்கு.
8) RT-PCR near me
அடுத்ததா நம்ம மக்கள் அதிகம் தேடியிருக்க விஷயம் RT-PCR near me. இந்த வருஷம் ஆரம்பத்துல இருந்தே கொரோனா தாக்கம் மிகப்பெரிய அளவுல இல்ல அப்டினாலும் இன்னும் கொரோனா நம்மள விட்டு முழுசா போகல. அதுமட்டுமில்லாம அப்பப்ப மக்கள் அதிகமா வசிக்குற இடங்கள் கொரோனா தாக்கம் ஏற்ற இறக்கத்துல இருந்துட்டே இருக்கு. அதுமட்டுமில்லா நமக்கு கொரோனா வந்தாலும் நமக்கு வந்திருக்குறது கொரோனாதான் அப்படினு நமக்கு தெரியாது. ஏன்னா கொரோனா வைரஸ் இதுவரைக்கும் எத்தனையோ முறை உருமாற்றம் அடைஞ்சு புதுசு புதுசா பரவிட்டு இருக்கு.
அப்படி பரவுற ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதமான அறிகுறிகள் தென்படுது. அதனால நமக்கு வந்திருக்குறது கொரோனா அப்டினே நிறைய பேருக்கு தெரியாம போய்டுது. அத Confirm பண்ண RT-PCR test எடுக்கனும் அப்படிங்குறதுக்காக RT-PCR near me-னு நம்ம மக்கள் நிறைய தேடியிருக்காங்க. So Indian Google Search Near Me-ல 8வது இடத்த RT-PCR near me பிடிச்சிருக்கு.
9) Polio drops near me
போலியோ சொட்டு மருந்து குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கியமான அருமருந்து. பெரும்பாலான நாடுகளில் பிறந்த குழந்தைகளுக்கு போலியோ தடுப்பூசி போடப்பட்டு வரும் நிலையில், இந்தியாவில் போலியோ சொட்டுமருந்து கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இளம்பிள்ளை வாதம் நோயை தடுப்பதற்காக இந்த போலியோ சொட்டு மருந்து பிறந்த குழந்தைகளுக்கு குறிப்பிட்ட வார இடைவெளியில் கொடுக்கப்படும். இப்படியாக பிறந்த குழந்தைகளுக்கு அத்தியாவசியமான போலியோ சொட்டு மருந்து குறித்து இந்திய மக்கள் அதிகம் தேடியிருப்பது அறிவியல் மற்றும் நவீன மருத்துவம் குறித்த மக்களின் விழிப்புணர்வை பிரதிபலிக்கிறது.
அதுமட்டுமல்லாமல் மக்கள் தொகையில் சீனாவுக்கு நிகராக போட்டியிடும் நாடாக இந்தியா முன்னேறி வருகிறது என்பதையும் இந்த கூகுள் தேடல் மறைமுகமாக உணர்த்துகிறது. இப்படியாக Polio drops near me இந்தியாவில் Google search-ல் அதிகம் தேடப்பட்ட விஷயங்களில் 9வது இடத்தை பிடித்துள்ளது.
10) Rental houses near me
இறுதியாக இந்தியாவில் 10 வது இடத்தை பிடித்திருக்கும் கூகுள் தேடல் என்ன அப்டினா அது Rental houses near me. பல Middle Class மற்றும் Lower Middle Class மக்களோட வாழ்க்கைய வாடகை வீடுகள் தான் ஆக்கிரமிச்சிருக்கு. அதுமட்டுமில்லாம சொந்த வீடுனு ஒன்னு இருந்தாலும், அதுல இருக்க முடியாம வேலை காரணமாவோ இல்ல வேற ஏதாவது காரணத்தாலயோ வேற இடங்கள்ல, இல்ல வெளியூர்கள்ல, இல்ல வெளி மாநிலங்கள்ல, ஏன் வெளிநாடுகள்ல போய் கூட வசிக்க வேண்டி வரும். அப்படி நம்ம நாட்லயும் ஒரு இடத்துல இருந்து இன்னொரு இடத்துக்கு வந்து வாழ்றவங்க இருப்பாங்க.
இப்படி ஏழ்மை நிலை மக்கள், இடப்பெயர்ச்சியான மக்கள் அனைவரும் தான் இருக்க வேண்டிய இடத்துக்கு பக்கத்துல வாடகை வீடு எங்க இருக்கு அப்படினு நிச்சயமா தேடியிருப்பாங்க. அதனால தான் இந்தியால Google-ல மக்கள் அதிகம் தேடின விஷயங்கள்ல Rental houses near me 10வது இடத்த பிடிச்சிருக்கு.
இப்படி நிறைய தமிழ் படங்கள்ல வந்த டயலாக் மாதிரி நம்ம வாழ்க்கையே ஒரு தேடல் தான். எந்த ஒரு தேவையா இருந்தாலும் அது நமக்கு பக்கத்துல எங்க கிடைக்கும், அதுலயும் பெஸ்ட் எதுனு நாம நிறைய விஷயங்கள் தேடிட்டே தான் இருக்கும். இண்டர்நெட் வசதியால அப்படி நாம அதிகமா தேடியிருக்குறது என்னனு துல்லியமா நம்மளால தெரிஞ்சுக்க முடியுது.
அதுமட்டுமில்லாம அதுல பெஸ்ட் எது அப்படின்னும் நம்மளால தெரிஞ்சுக்க முடியுது. நவீன டிஜிட்டல் வாழ்க்கைல இண்டர்நெட் மூலமா நமக்கு நடக்கக் கூடிய நல்ல விஷயங்கள்ல இதுவும் ஒன்னு. இப்படி டிஜிட்டல் உலகத்த ஆரோக்கியமான வழில உபயோகப்படுத்துறது நமக்கு மட்டுமில்ல எல்லாருக்குமே நன்மையா அமையும். இதே போல நல்ல நல்ல நமக்கு தேவையான விஷயங்கள் குறித்த கூகுள் தேடல் அடுத்த வருசத்துலயும் தொடரட்டும்.