“த்ரிஷா” இந்த 3 எழுத்து 21 வருஷங்களா தென்னிந்திய சினிமா ரசிகர்கள் மனசுல பச்ச குத்துனது போல நிலைச்சிருக்கு. “த்ரிஷா”ன்ற பெயர கேட்டாலே தலைநகரம் படத்துல வர வடிவேல் Modulation நமக்கு தானே வந்திடும் திரிஷா… திரிஷா… திரிஷா…
1999-ல மிஸ் சென்னை ஆன த்ரிஷா, தனக்கு கிடைச்ச எந்த வாய்பையும் மிஸ் பண்ணாம சரியா யூஸ் பண்ணி, தென்னிந்திய சினிமா கனவுக்கன்னி ஆனாங்க. Queen of South India, South Indian Queen இப்படி பல பட்டங்கள் த்ரிஷாக்கு, மிஸ் சென்னை ஆன அப்பறம் லேசா லேசா, உனக்கு 20 எனக்கு 18-னு நிறைய படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைச்சு போஸ்டர்ஸ்லாம் ரிலீஸ் ஆச்சு, ஆனா அந்த படங்கள் கொஞ்சம் லேட் ஆக, 2002-ல மெளனம் பேசியதே படம் மூலமா தமிழ் சினிமால அறிமுகம் ஆனாங்க த்ரிஷா.
ஆரம்பத்துலயே வெற்றியோட தொடங்கின த்ரிஷாவோட பயணம் 2003-ல மனசெல்லாம், சாமி, அலை, உனக்கு 20 எனக்கு 18னு ஒரே வருஷத்துல நாலு படங்கள் ரிலீஸ் ஆகுற அளவு த்ரிஷாக்கு சிவப்பு கம்பளம் விரிச்சுது. விரிச்ச கம்பளம் சிவப்பா இருந்தாலும், கிடைச்ச சிக்னல் பச்சைன்ற மாதிரி த்ரிஷாவோட சினிமா பயணம் Highways-ல போற கார் போல போயிட்டே இருந்துச்சு.
2004-ல தளபதி விஜயோட கில்லி, இப்ப வரை சன் டிவில 90’s Kids 4000 முறை பாத்தாலும் Once More கேக்குற மாதிரியான படம், கில்லியோட வெற்றி அடுத்தடுத்து பெரிய பெரிய படங்கள்ல நடிக்க த்ரிஷாக்கு வாய்ப்பு தந்துச்சுனு சொல்லாம், தமிழ் சினிமா மட்டுமில்லாம தெலுங்கு சினிமாலயும் திரிஷா… திரிஷா… திரிஷா…னு ரசிகர்கள் த்ரிஷாவ கொண்டாடினாங்க. அதுக்கு காரணம் “வர்ஷம்” படத்துல சைலஜான்ற ரோல்ல சிறப்பான நடிப்ப வெளிப்படுத்தினதுக்காக 2004 Best Actress Filmfare Award வாங்கினாங்க.
முக்கியமா 2004-லருந்து த்ரிஷாக்கு தமிழ், தெலுங்குல நடிச்ச படம் எல்லாம் நிறைய ஹிட் ஹிட் ஹிட், Hitwomen-னு கூட சொல்லாலம். ஆயுத எழுத்து, திருப்பாச்சி, உனக்கும் எனக்கும், ஜி, ஆறு, ஆதி, பீமா, அபியும் நானும், சர்வம் இப்படி ஒவ்வொரு படங்கள்லயும் வித்தியாசமான நடிப்பால… போட்டிக்கு பல நடிகைகள் இருந்தாலும் தனக்கான பாதைல வெற்றிநடை போட்டாங்க த்ரிஷா.
விண்ணைத்தாண்டிய வெற்றிய பாத்த அப்பறம் த்ரிஷாக்கு வந்த படம் விண்ணைத்தாண்டி வருவாயா, சென்னைல இருக்க ஒரு தியேட்டர்ல இப்பவும் ஓடிட்டு இருக்கு. “ஜெஸ்ஸி கார்த்திக்” இந்த ஜோடிய விரும்பாத ஜோடி யாரும் இருக்க மாட்டாங்க. இசைப்புயல் இசைல வந்த சாங்ஸ் எல்லாம் ஜெஸ்ஸி கதாபாத்திரத்துக்காக Compose பண்ணின Song-ஆ, இல்ல த்ரிஷாக்காக பண்ண Song-ஆ அப்டினு யோசிக்குற அளவுக்கு Lyrics த்ரிஷாக்கு அப்படியே மேட்ச் ஆகும்.
VTV மெகாஹிட்டுக்கு அப்பறம் Blockbuster ஹிட் மங்காத்தா, என்றென்றும் புன்னகை, சமர், என்னை அறிந்தால், தூங்காவனம், அரண்மனை 2, கொடி-னு பல ஹிட் சில ப்ளாப்னு போன த்ரிஷா சினிமா பயணத்துல மறுபடி 2k Kids-க்கு த்ரிஷா யாருனு நிரூபிக்குற மாதிரி வந்த கதாபாத்திரம் தான் “96 ஜானு”. அதும் அந்த மஞ்ச சுடிதார் போட்டு காதலே காதலே பாட்டோட வர Intro Scene எப்பவும் மறக்க முடியாது.
ஜானு கதாப்பாத்திரம் இளைஞர்கள் மத்தியில எந்த அளவு தாக்கத்த கொடுத்துச்சுனா தன்னோட வாழ்க்கைலருந்து தொலைஞ்ச காதலிய ஜானு மாதிரி திரும்ப பாக்க வாய்ப்பு கிடைக்குமானு யோசிக்க வச்சது. அதுக்கப்பறம் த்ரிஷா சோலோவா நடிச்ச படங்கள் சரியா போகலனாலும், ஜெஸ்ஸி, ஜானு போல மறக்க முடியாத கேரக்டரா கிடைச்சது “பொன்னியின் செல்வன் குந்தவை”. த்ரிஷாவ விட இந்த கேரக்டருக்கு Replacement காட்டுறவங்களுக்கு Life Time Settlement.
அக நகனு அந்த BGM ஓட த்ரிஷாவ பாக்கைல வந்தியத்தேவன விட காதல் வயப்பட்டது தியேட்டர்ல படம் பாத்த நாம தான். சும்மாவா சொன்னாங்க South Indian Queen-னு. ஒவ்வொரு நடிகைகளுக்கும் சினிமாக்குள்ள வரும் போது ஒரு கனவு இருக்கும், எல்லா Top Heroes கூடவும் நடிக்கனும்னு, அது த்ரிஷாவோட சினிமா வாழ்க்கைல நிஜமா நடந்திருக்கு சூப்பர் ஸ்டார், உலகநாயகன், தளபதி, அஜித்குமார், விக்ரம், சூர்யா, கார்த்தி, தனுஷ், சிம்பு, மாதவன், விஜய்சேதுபதி, சிரஞ்சீவி, ரவிதேஜா , மகேஷ்பாபு, பிரபாஸ், வெங்கடேஷ், பாலய்யா, நாகார்ஜூனா, ஜூனியர் என்டிஆர்னு சொல்லிட்டே போகலாம்.
த்ரிஷா எல்லா ஹீரோஸ் கூடவும் நடிச்சிருந்தாலும் இப்ப வரை த்ரிஷா Onscreen Best Pair-னா தளபதி விஜய் தான். கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ வரை இந்த ஜோடிக்கு தனி Fan Pages இருக்கு. ஜெஸ்ஸி, ஜானு, தனலட்சுமி, குந்தவை, ஏன் மொளகாபொடினு இந்த பெயரெல்லாம் எங்க கேட்டாலும் த்ரிஷா தான் நியாகபத்துக்கு வருவாங்க. தன்னோட விடாமுயற்சியால 21 வருஷம் தென்னிந்திய சினிமால என் தனி வழி தனி வழினு வெற்றிய நோக்கி போய்ட்டு இருக்க த்ரிஷாக்கு அடுத்து ரிலீஸ் ஆக போற விடாமுயற்சியும் மிகப்பெரிய வெற்றியா அமைய சூரியன் FM-ன் வாழ்த்துக்கள்.