ஆகஸ்ட் மாசம் 15ஆம் தேதி சுதந்திர தினம் அப்படிங்குறது நம்ம எல்லாருக்குமே தெரியும்.
2014 ஆகஸ்ட் 15 ஆம் தேதி ஒரு தமிழ் படத்த ரிலீஸ் பண்ணி எல்லாரையுமே அந்த சமயத்துல Occupied ah வச்சிருக்க பார்த்திருந்தாங்க, அதுதான் நம்ம இயக்குநர் லிங்குசாமி கத்துக்கிட்ட மொத்த வித்தையும் இறக்குன அஞ்சான் திரைப்படம். நம்ம சூர்யா, சமந்தா, பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் நடிப்புல இந்த திரைப்படம் உருவாகியிருந்துச்சு.
இந்த திரைப்படத்தோட கதைக்களம் நல்லா இருந்தாலும் இந்த திரைப்படத்துக்கு எதிர்மறை விமர்சனங்களும் அதிகமா தான் இருந்துச்சு. அதுக்கு காரணம் நம்ம டைரக்டர் லிங்குசாமி அவர்கள் இந்த திரைக்கதையை இன்னும் கொஞ்சம் Polished ah வைத்திருக்கலாமோ அப்படின்னு நிறைய பேர் யோசனை செஞ்சாங்க.
இந்த கதையில ஒரு சில மாற்றங்கள் செஞ்சிருந்தா இந்த திரைப்படம் ஒரு சூப்பர் ஹிட்டான படமா இருந்திருக்கும். ஆனாலுமே இந்த படத்துல நடிச்ச சூர்யா அவர்களுடைய கெட்டப்பிற்கு Fans கண்டிப்பா இருக்கத்தான் செய்றாங்க. அதுவும் அவருடைய ஹேர் ஸ்டைல் அவருடைய, ஆட்டிட்யூட் இந்த திரைப்படத்தில் பார்க்க கேங்ஸ்டருக்கான எல்லா அம்சமும் நம்ம லிங்குசாமி அவர்கள் நம்ம சூர்யாவுக்கு வச்சிருந்தாங்க.
அதுலயும் சூர்யா இந்த திரைப்படத்துல எப்பவும் வாயில ஒரு குச்சி வச்சிட்டே நடிச்சிருப்பாரு… அத ஒரு மாஸான விஷயமாவே காட்டியிருந்தாங்க, படம் ரிலீஸ் ஆன டைம்ல யங்ஸ்டர்ஸ் மத்தில ஒரு பிரபலமான ஸ்டைலாவே இது இருந்துச்சு.
இந்த கதையில ராஜு பாயோட போர்ஷன்ஸ் எல்லாருக்குமே பிடிச்சுருந்துச்சு. ஆனா நம்ம சூர்யா கிருஷ்ணன்-ற கேரக்டருக்குள்ள படத்துல வரும்போது… அந்த இடத்துலருந்து திரைப்படம் கொஞ்சம் கொஞ்சமா ஸ்லோவாக ஆரம்பிச்சிருச்சு. இந்த திரைப்படத்துல ஆக்சன் சீக்குவன்ஸ் எந்த அளவுக்கு நம்ம லிங்குசாமி பிளான் பண்ணி இருந்தாரோ அதுக்கு ஈக்குவலான காதல் காட்சிகளும் இருக்கத்தான் செஞ்சது.
அதுலயும் குறிப்பா “உன் கால் தரையில படல, நீ நிதானமா இல்ல, முதல்ல நில்லு, அப்புறம் வந்து சொல்லு”னு சொன்ன டயலாக் நல்ல பேமஸாவும் டிரெண்டிங்காவும் இருந்தது, இந்த படத்துல ஆக்ஷன் சீக்வென்ஸ், காதல் எப்படி ஈக்வலா இருந்துச்சோ அதுக்கு நிகரா நம்ம சூர்யா மற்றும் வித்யூத் ஜம்வால் அவர்களுடைய பிரண்ட்ஷிப்பும் இருந்துது.
மொத்தமா இந்த திரைப்படம் நம்ம சூர்யா அவர்களுக்கு ஒரு ஆவரேஜ் ஹிட்டான திரைப்படமா அமைஞ்சாலும், கிட்டத்தட்ட உலகளவுல இந்த திரைப்படம் 83 கோடிக்கு ரூபாய்க்கு மேல வசூல் பண்ணியிருந்துச்சு.