இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். உலகெங்கும் உள்ள இசைப்புயலின் ரசிகர்களும் அவரது பிறந்தநாளை உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்றனர்.
ஏ.ஆர். ரஹ்மானின் இசை சாதனைகளை பற்றி சொல்ல இந்த ஒரு பதிவு போதாது. கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை இந்த தமிழனின் புகழ் நாள்தோறும் பாடல்கள் மூலம் பரவிக்கொண்டே இருக்கிறது. 90-களில் சினிமா பயணத்தை “ரோஜா”-வில் தொடங்கிய இவர், இந்திய இசையின் ராக “ராஜா”-வாக திகழ்ந்து வருகிறார்.
தமிழ், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, ஆங்கிலம் என 150-ற்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்துள்ள ரஹ்மான் தனக்கென ஒரு எண்ணற்ற ரசிகர்கள் கொண்ட பட்டாளத்தை பெற்றுள்ளார். கலையுலகின் பொக்கிஷமாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானை காலத்தால் அழியாத அவரது பாடல்கள் தினம் தினம் மக்கள் மனம் எனும் சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்க்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
ஏ.ஆர்.ரஹ்மானின் இசையை தாண்டி அவரது காந்த குரலுக்கென தனி ரசிகர்கள் உண்டு. இவரது குரலில் அமைந்த அருமையான பாடல்களுள் நம் மனதை விட்டு நீங்காத ஐந்து பாடல்களை கீழே காணலாம்.
எல்லாப்புகழும் இறைவனுக்கே.
நமக்கு எப்போதெல்லாம் ஒரு புத்துணர்ச்சியோ ஊக்கமோ தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் இப்பாடல் நமக்கு கைகொடுக்க தவறியதில்லை. கவிஞர் வாலியின் வாலிப வரிகளில் அமைந்த இப்பாடலுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் குரல் உயிர் கொடுத்துள்ளது என்றே கூறலாம்.
நியூ யார்க் நகரம்
” காதலர்களின் பிரிவை கவலையோடு பாடி உருக வைக்க “நியூ யார்க் நகரம்” பாடலை மிஞ்சும் பாடல் இருக்கிறதா ????.. ” என்ற சந்தேகம் நமக்கு ஏற்படும் வகையில் ஏ.ஆர்.ரஹ்மான் பாடி இசையமைத்த இப்பாடல் பல காதலர்களின் Playlist-ல் இடம்பிடித்த பாடலாக இருக்கிறது.
வந்தே மாதரம்
தாய் மண்ணுக்கு வணக்கம் சொல்ல நினைக்கும்போதெல்லாம் நம் மனதில் தோன்றும் குரல் ஏ.ஆர். ரஹ்மானின் குரல். தேசப்பற்றை தேனிசை மூலம் நமக்கு உணர வைத்த ரஹ்மானின் குரலும் இசையும் இந்த தேசத்தின் இசையாக என்றும் ஒலிக்கும்.
அதிரடிக்காரன்
சூப்பர்ஸ்டாரின் அதிரடியான style-க்கு அடையாளமாக இருக்கும் ஒரு பாடல் “அதிரடிக்காரன் ” பாடல். இப்பாடல் ரஹ்மானின் குரலில் அமைந்த ஒரு மாஸான Peppy number. நவீன வரிகளும், நல்ல இசையும் சேர்ந்து ரஜினியின் அதிரடியான Action பாடலை நமக்கு வழங்கியுள்ளது.
ஊர்வசி ஊர்வசி
90s kid-களின் மனம் கவர்ந்த Peppy பாடல் “ஊர்வசி” பாடல். இப்பாடலின் வரிகளுக்கெனவே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வரிகளை நம்மை முணுமுணுக்க செய்ய வைத்ததற்கு முக்கிய காரணம் ரஹ்மானின் குரலில் அந்த பாடலை கேட்டது தான். இன்றும் பல இளைஞர்களின் Favorite பாடலாக இப்பாடல் இருந்து வருகிறது.
இப்பாடல்களை தவிர்த்து உங்கள் மனம் கவர்ந்த ஏ.ஆர்.ரஹ்மான் பாடலை Comment Box-ல் பதிவு செய்யவும். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.