சமீபத்தில் ‘ராதே ஷ்யாம்’ பட வெளியீட்டை முன்னிட்டு அப்படத்தின் கதாநாயகன் பிரபாஸ் சூரியன் FM-க்கு நேர்காணல் அளித்தார். அப்போது அவரிடம் ராதே ஷ்யாம் படத்தில் பணிபுரிந்த அனுபவம் குறித்து நிறைய விஷயங்கள் பேசினோம்.
பிரபாஸ்க்கு முன்பே நமக்கு பேட்டியளித்த படத்தின் நாயகி பூஜா ஹெக்டே, “பிரபாஸிடம் பணிபுரியும் சமையல் கலைஞர் நண்டு மற்றும் மட்டன் பிரியாணி அற்புதமாக சமைப்பார், பிரபாஸிடம் இருந்து அவரை எப்படியாவது தூக்கிச் சென்று விட வேண்டும்” என்று கூறியிருந்தார். இது குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என பிரபாஸிடம் கேள்வியெழுப்பினோம்.
அதற்கு பதிலளித்த பிரபாஸ், “ஆமாம் பூஜா ஹெக்டே நன்றாக சாப்பிடுவார். அப்படி சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறார். அது எப்படியென தெரியவில்லை. இந்த கேள்வியை அவரிடம் கண்டிப்பாக கேட்க வேண்டுமென நினைக்கிறேன்.
பூஜா ஹெக்டே, த்ரிஷா இருவரும் நன்றாக சாப்பிடுவார்கள். ஆனால் அப்படியே இருப்பார்கள். அதிர்ஷ்டசாலிகள்” என்று கூறினார். மேலும் ராதே ஷ்யாம் குறித்த நிறைய சுவாரஸ்யமான விஷயங்களையும் நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
முழு நேர்காணலை கீழே உள்ள இணைப்பில் காணுங்கள் :