இந்தக் கதையை எங்க இருந்து ஆரம்பிக்குறது-னு ஒரு சின்ன குழப்பம் எனக்கு இருக்கு.
நகைச்சுவை உலகத்தோட மன்னன்னு சொல்லி ஆரம்பிக்குறதா, நம்மளோட ஸ்ட்ரெஸ் பஸ்டர்-னு சொல்றதா, மீம்ஸ்களின் நாயகன்-னு சொல்றதானு பல்வேறு குழப்பங்கள். சரி வழக்கம் போல இந்தக் கதையை அவரோட கடந்த காலத்துல இருந்தே ஆரம்பிப்போம்.
இவரோட உண்மையான பெயர் குமரவேல். குமரவேலா? அப்படி ஒரு நகைச்சுவை நடிகர் இருக்காரா-னு தோணுதா? இவரு திரை பெயருக்கு வடிவம் கொடுக்க, அந்த வடிவத்தோட முதல் இரண்டு எழுத்துக்களையும், அவர் இயர் பெயரோட கடைசி இரண்டு எழுத்துக்களையும் சேருங்க!! நம்ம வைகைபுயல் “வடிவேலு” வருவாரு.
அடடா!! இந்த பெயரை படிக்கும் போதே என்ன ஒரு ஆனந்தம், என்ன ஒரு புண்சிரிப்பு நம்ம உதட்டுல. அந்த அளவுக்கு அவர் செய்த நகைச்சுவை ஏராளம். சிரிச்ச முகத்தோட இவர் நம்ம முன்னாடி காட்சி கொடுத்தாலும் அவரோட கடந்த காலம் அவருக்கு சிரிப்பை கொடுக்கலங்க.
சகோதரர்கள் ஆறு பேர் அவர் கூட இருந்தாலும் குடும்ப கஷ்டத்தை புரிஞ்சிக்கிட்டு தன் தந்தைக்குத் துணையாய் கண்ணாடி அறுக்க போனாரு நம்ம வைகைபுயல். வேலை செய்யும் போது அலுப்பு தெரியாம இருக்க, சில நகைச்சுவைகளை பண்ணி தான் மட்டுமில்லாம கூட வேலை பாக்குறவங்களோட களைப்பையும் போக்குறாரு.
அப்படி ஆரம்பிச்சது இவரோட நகைச்சுவை பயணம். ஒரு கட்டத்துல தன் அப்பா இறந்து போக வருமானதுக்காக நாடகங்கள்-ல நகைச்சுவை நடிகரா நடிச்சாரு. ஒரு திருமண விழாவுல நடிகர் ராஜ் கிரண்-அ சந்திச்ச இவரு, உனக்கு என்னப்பா தெரியும்-னு கேட்க, “எனக்கு ஏதோ கொஞ்சம் நடிக்க தெரியுங்க”-னு சொல்றாரு இந்த நடிப்புக் கடல்.
சென்னைக்கு புறப்பட்டு வா-னு ராஜ் கிரண் சொல்ல, வீட்டுல உள்ள இரண்டு பாத்திரங்களை வித்து நூறு ரூபாயோட பயணத்தை தொடங்க நினைச்ச இவருக்கு இயற்கை அதிர்ச்சியை கொடுத்துச்சு. கொண்டு வந்த பணம் எல்லாம் அவர் தூக்கத்துல இருக்கும் போது காத்துல பறந்து போக, லாரி டிரைவர் ஒருத்தர் அவரை சென்னைக்கு அழைச்சிட்டு வராங்க. செலவுக்கு ஐந்து ரூபாய் கொடுத்துட்டு கிளம்புறாங்க. இவரு கண் கலங்கி நிக்கிறாரு.
ஏ.வி.எம் வாசல்-ல வாயுப்புக்காக காத்திருந்த இவர்கிட்ட அங்க உள்ள காவளாலி எங்க கொஞ்சம் நடிச்சிக் காட்டு-னு சொல்ல, இடம் பொருள் ஏவல் பார்க்காம அவரு முன்னாடி நடிச்சுக் காட்டி பாராட்டையும் வாங்குறாரு. ஆனாலும் வாய்ப்பு கிடைக்காமல் போக, ராஜ் கிரண் அலுவலகத்துல உதவியாளரா வேலை செய்யுறாரு.
தன் துரு துரு பேச்சால் எல்லாரையும் கவர்ந்து, “என் ராசாவின் மனசிலே” திரைப்படத்துல அறிமுகம் ஆகுறாரு. அப்படி ஆரம்பிச்சு படிப் படியா தேவர் மகன் படத்துல இவரு நடிக்க, நடிகர் திலகம் சிவாஜி அவர்களே நம்ம உலகநாயகன் கிட்ட “இவன் வெறும் நகைச்சுவை நடிகன் மட்டும் இல்ல, இவன் ஒரு கதாபாத்திர நடிகன்”-னு பாராட்டையும் வாங்குறாரு.
அப்புறம் The Rest Is History-னு சொல்ற மாதிரி அவரோட நகைச்சுவை, நடித்த காதபத்திரங்கள்-னு எல்லாமே நமக்கு அத்துப்பிடி. அவரை ரசிச்ச மக்கள் சார்பாகவும், இனியும் ரசிக்க போறவங்க சார்பாகவும் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.