பெட்ரோல் இல்லனா பைக் ஓடாது, Battery இல்லனா வாட்ச் ஓடாது, அந்த மாதிரி சோசியல் மீடியா இல்லனா நமக்கு நாளே ஓடாது, ஆனா இவரு இல்லனா அந்த சோசியல் மீடியாவே ஓடாது.
அவர் வேற யாரும் இல்ல நம்ம வைகை புயல் வடிவேல் சார் தான். ஆமாங்க நம்மளோட தினசரி வாழ்க்கைல அவர நம்மளால தவிர்க்கவே முடியாது. ஏன்னா நம்ம Use பண்ற சோசியல் மீடியால அவரோட காமெடி வசனம் இல்லாத Meme-அ நம்மளால பார்க்கவே முடியாது.
அவரோட வசனம் மட்டும் இல்ல அவரோட ஒவ்வொரு அசைவும் மீமா இருக்கு. உலகத்துல நடக்குற எந்த நிகழ்வா இருந்தாலும் அதுக்கேத்த மாதிரி நம்ம தலைவர் கிட்ட டயலாக்கும், வசனமும் இருக்கும்.
இதுல இன்னும் ஒரு படி மேல போய் இவருடைய மீம வச்சு பசங்களுக்கு பாடம் சொல்லி குடுக்கறவங்களும் இருக்காங்க. அதுகூடவே 5 வயசு குழந்தைல இருந்து 55 வயசு பாட்டி வரைக்கும் எல்லாரும் அவங்களோட தினசரி வாழ்க்கைல நடக்கற ஒவ்வொரு விஷயத்தையும் அவரோட டயலாக்க பயன்படுத்தி சொல்லிட்டு இருக்காங்க.
வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்னு சொல்லுவாங்க. அப்டினா நம்மள தினமும் வயிறு குலுங்க சிரிக்க வச்சு, ஆனந்தப் படுத்தி நம்ம வாழ்நாள அதிகப்படுத்துற இவர நகைச்சுவை டாக்டர்-னே சொல்லலாம்.
அப்பேற்பட்ட நகைச்சுவை மன்னன் வைகை புயல் வடிவேலு அவர்களுக்கு சூரியன் FM சார்பா பிறந்த நாள் வாழ்த்துக்கள தெரிவிச்சுக்கலாம்.