துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கவிருக்கும் ‘அதிகாரம்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் Second லுக் போஸ்டர்கள் நேற்று வெளியானது. இப்படத்திற்கு இயக்குனர் வெற்றிமாறன் திரைக்கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் First லுக் போஸ்டரை, ஒரு வீடியோ மூலம் இப்படக்குழு வெளியிட்டனர். அந்த வீடியோ சிங்கப்பூர் விசாவில் இருந்து ராகவா லாரன்ஸின் புகைப்படம் ஒன்று உருவெடுக்கும் படி உருவாக்கப்பட்டிருந்தது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் தன் கையில் ஒரு கூர்மையான ஆயுதம் ஏந்திய படி, கோபத்துடன் ராகவா லாரன்ஸ் நடந்து வருவது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
அவர் அணிந்திருக்கும் உடையை வைத்து பார்க்கும் போது, இப்படத்தில் அவரது கதாபாத்திரம் ஹோட்டலில் பணிபுரியும் ஒரு நபரின் கதாபாத்திரமாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது போல தெரிகிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் வெளியான சில மணி நேரங்களில் இப்படத்தின் Second லுக் போஸ்டரும் வெளியானது.
வெளியான இரண்டாவது போஸ்டரில், ராகவா லாரன்ஸின் கதாபாத்திரத்தின் பெயர் Reveal செய்யப்பட்டிருந்தது. இந்திய அரசின் பாஸ்போர்ட் வடிவத்தில் வெளியிடப்பட்ட இந்த போஸ்டரில், லாரன்ஸின் பெயர் ‘தமிழ்வேல்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஃபர்ஸ்ட் லுக் மற்றும் Second லுக் போஸ்டர்களை வைத்துப் பார்க்கும் போது, வேலைக்காக இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஒரு இளைஞனின் கதையாக ‘அதிகாரம்’ திரைப்படம் இருக்கக் கூடுமோ என்ற சந்தேகம் எழுகிறது.
எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் இப்படத்தை இயக்குவதால் ‘அதிகாரம்’ ஒரு கமர்சியல் கலந்த ஆக்ஷன் திரைப்படமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இயக்குனர் வெற்றிமாறனின் திரைக்கதை அம்சம் இப்படத்திற்கு மேலும் வலு சேர்க்கும் என நம்பலாம்.
அதிகாரம் திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இப்படம் வெற்றியடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.