Specials Stories

அழகிய All Rounder – ஆண்ட்ரியா !!!

தரமணியில் தரம் காட்டிய ஆண்ட்ரியாவிற்கு…..

“ஓ-சொல்றியா மாமா…ஓ-ஓ-சொல்றியா மாமா”-ங்கற பாட்ட யார்லாம் கேட்கலைன்னு கேட்டா …உ ஹும்-னு யாருமே சொல்லமாட்டாங்க…அப்படி பட்டி தொட்டி என எல்லாப் பக்கமும் பட்டயகிளப்புற அளவுக்கு செம ஹிட் குடுத்து எல்லாரோட playlist-லயும் ரிப்பீட் Mode-ல இருக்குற இந்த பாடலோட தமிழ் version குரலுக்கு சொந்தகாரங்க ஆண்ட்ரியா ஜெரேமியா-க்கு சூரியன் FM-ன் பிறந்தநாள் வாழ்த்துக்ககள்.

ஆண்ட்ரியா, இவங்கள பத்தி நிறைய சொல்லலாம். திரைப்பட துறைல தன்னோட சினிமா வாழ்க்கை தொடங்குனதுல இருந்து தன்னோட முழு கவனம் எப்பவும் பாடகியா இருக்கவே விரும்புறதா பல நேரங்கள்-ல சொல்லியிருந்தாலும், தன்னோட தன்னிச்சையான நடிப்பால, வித்யாசமான கதாபாத்திரங்களால தனக்குனு ஒரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கிருக்காங்க இந்த ஆங்கிலோ- இந்தியன் பொண்ணு ஆண்ட்ரியா.

Andrea Jeremiah tests Covid positive, shares singing video from quarantine.  Watch - Movies News

ஆண்ட்ரியா தன்னோட பத்து வயசுல இருந்து மைக் பிடிச்சி பாட ஆரம்பிச்சவங்க. 2005 ல வெளிவந்த கண்ணும் கண்ணும் நோக்கியா பாடல் மூலமா தன்னை ஒரு பின்னணி பாடகியா அறிமுகம் செஞ்சாங்க. ஹாரிஸ் ஜெயராஜ், G.V பிரகாஷ், யுவன் ஷங்கர் ராஜா-னு பல புகழ் பெற்ற இசையமைப்பாளர்களோட பணிபுரிஞ்சிருக்காங்க.

2007 ல வெளிவந்த பச்சைகிளி முத்துச்சரம் படம் இவங்கள கதாநாயகியா தமிழ் சினிமாவுக்கு அறிமுகம் செய்ய, தொடர்ந்து 2010-ல ஆயிரத்தில் ஒருவன், 2011-ல மங்காத்தா, 2013-ல விஸ்வரூபம்-னு வெவ்வேறு கதாபாத்திரம் கொண்டு வந்து கொடுத்தாலும் 2017 ல வெளியான தரமணி, பல பெண்களோட குரலாவே இவங்க கதாபாத்திரத்தை பதியவச்சது.

மாடர்ன் கதாபாத்திரமாவே தொடர்ந்து நடிச்சிட்டு இருந்த இவங்கள வேற லெவல் பரிணாமத்துல ரசிகர்கள் முன்ன கொண்டு போய் சேர்த்தது வெற்றிமாறனோட வட சென்னை, சந்திரா கதாபாத்திரம். இப்படித்தான் இவங்க நடிப்பாங்கனு யாருமே யூகிக்க முடியாத அளவுக்கு தன்னோட ஒவ்வொரு படத்துக்கும் வித்தியாசங்களை கொடுத்துட்டு இருக்குற இவங்க தமிழ் சினிமா மட்டும் இல்லாம மலையாளம், தெலுங்கு-னு தடம் பதிச்சிட்டு இருகாங்க.

குறிப்பா சொல்லனும்னா மலையாளத்துல இவங்க நடிச்ச அன்னையும் ரசூலும் மிகப்பெரிய வரவேற்ப்பை இவங்களுக்கு கொடுத்தது. அவ்ளவுதானா என்று ஒரு வட்டத்துக்குள்ள அடக்கமுடியாத அளவு இன்னும் பல திறமைகள் மூலமா வெவ்வேறு கோணங்கள்ல தன்னை ஈடுபடுத்த இவர் தவறுவதே இல்லனு சொல்றதுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு இவங்களோட இசையமைப்பாளர் அவதாரம்.

மற்ற இசையமைப்பாளர்களுக்காக பாடுவதை தவிர ஆண்ட்ரியா தன்னோட சொந்த இசையையும் உருவாக்குறாங்க. தன்னோட தரமணி படத்துல Soul of தரமணி –ன்ற பாடலை எழுதவும் இசையமைக்கவும் பாடவும் செஞ்சிருந்தாங்க. இன்னும் பல theme பாடல்கள் மற்றும் இசை ஆல்பம் இவங்களுக்கு இசை துறைல தனி இடத்தை உருவாக்கிருக்கு.

அடுத்து என்ன திறமையை வெளிக்காட்ட போறாங்கனு கணிக்க முடியாத நடிகை ஆண்ட்ரியாவிற்கு மீண்டும் ஒருமுறை சூரியன் FM-ன் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

Article by RJ Arivu

About the author

alex lew