Stories Trending

அஞ்சலியின் பிறந்தநாள்!!!

HBD Anjali
HBD Anjali

தனித்துவமான கதாபாத்திரங்கள் முலம் சினிமா ரசிகர்கள் மனதில் ஆழமான இடத்தை பிடித்தவர் நடிகை அஞ்சலி. இன்று (ஜூன் 16, 2020) இவர் தனது 34-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவரது பிறந்தநாளை ரசிகர்கள் இணையத்தில் ஆரவாரமாக கொண்டாடி வருகின்றனர். 

கற்றது தமிழ் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தன முதல் படத்திலேயே தன் தத்ரூபமான கதாபாத்திரத்தை அழகாக வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்திருப்பார். இன்று வரை இவரது ‘ ஆனந்தி ‘ கதாபாத்திரம் பெரும் அளவில் பேசப்பட்டுவருகிறது. 

படங்களில் தன் கதாபாத்திரத்திற்கு தானே Dubbing கொடுக்கும் நடிகைகள் ஒரு சிலரே. அந்த வகையில் அஞ்சலி பெரும்பாலும் தன கதாபாத்திரங்களுக்கு அவரே Dubbing கொடுப்பார். 25-ற்கும் மேற்பட்ட படங்களில் நடித்த இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு  மொழிகளிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அங்காடி தெரு, கற்றது தமிழ், இறைவி, எங்கேயும் எப்போதும் படங்களில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்கள் இவருக்கென தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை கொடுக்கும் வகையில் அமைந்தது.

இவரது  பிறந்தநாளுக்கு ரசிகர்கள் #HappyBirthdayAnjali என்ற Tag-ஐ ட்ரெண்ட் செய்து தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

நடிகை அஞ்சலிக்கு சூரியன் FM  சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

Tags

About the author

alex lew