Cinema News Stories

தளபதி விஜயின் வேற லெவல் ‘அரபிக் குத்து’

Arabic-Kuthu

காதலர் தினமான இன்று காலையிலிருந்து பெரும்பாலான தமிழ் சினிமா ரசிகர்கள் காத்திருந்தது ‘அரபிக் குத்து’ பாடல் வெளியாகும் இந்த தருணத்திற்காக தான். அரபிக்குத்து பாடல் ப்ரோமோவின் தாக்கத்திலிருந்தே ரசிகர்கள் இன்னும் மீளாத நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.

சமூகவலைத்தளங்களில் இன்று காலை முதலே பாடல் குறித்த தங்களது எதிர்பார்ப்புகளை #ArabicKuthuFromToday, #BeastFirstSingle, #HalamathiHabibo உள்ளிட்ட ஹேஷ்டேகுகளில் ரசிகர்கள் பகிரத் தொடங்கி விட்டனர். பாடல் மீதான எதிர்பார்ப்புகளை மேலும் அதிகரிக்கும் விதமாக காலையில் அரபிக்குத்து பாடலுக்கான 2வது போஸ்டரும் வெளியாகி வைரலானது.

Image

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள இப்பாடல் முழுக்க அரபிக் ஸ்டைலில் எடுக்கப்பட்டுள்ளது. Background set முதல் costume வரை அனைத்தும் அரபிக் ஸ்டைலிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளது. வழக்கம் போல விஜயின் நடனம் இப்பாடலிலும் தனித்துவமாக அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது.

ஏற்கனவே வெளியான ப்ரோமோவிற்கே பலரும் Reels செய்து வீடியோக்கள் பதிவிட்டு வைரலாகி வரும் நிலையில் தற்போது வெளியாகியுள்ள பாடலுக்கு நாளை முதல் பல்வேறு விதமான ‘ஹலமத்தி ஹபிபூ’ வீடியோக்கள் வெளியாகி சமூகவலைத்தளங்களை ஆக்கிரமிக்கும் என தெரிகிறது.