நடிகர் அருள்நிதி தனது 33 ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுக்கும் ஒரு சில கதாநாயகர்களில் அருள்நிதியும் ஒருவர்.
அந்த வகையில் அருள்நிதியின் பிறந்தநாள் அறிவிப்பாக அவரது அடுத்த படத்தின் டைட்டில் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. அறிமுக இயக்குனர் இன்னசி பாண்டியன் இயக்கும் இப்படத்திற்கு டைரி என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இப்படம் குற்றங்களை விசாரிக்கும் இன்வெஸ்டிகேஷன் கதைக்களத்தை கொண்டு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் டைட்டிலை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார்.
இப்படத்தை கதிரேசன் தயாரிக்க அரவிந்த் சிங் ஒளிப்பதிவு செய்கிறார். அருள்நிதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இப்படத்தின் டைட்டில் போஸ்டர் இணையத்தில் வெளியிடப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது. டைட்டில் போஸ்டர் குறித்த அருள்நிதியின் டிவிட்டர் பதிவை கீழே காணுங்கள்.
இப்படம் அருள்நிதியின் 14ஆவது படமாக வெளியாக உள்ளது. இதுமட்டுமின்றி தனது பதினைந்தாவது படத்தின் அறிவிப்பையும் அருள்நிதி வெளியிட்டுள்ளார். “எரும சானி” விஜய் இயக்கத்தில் அருள்நிதி தனது பதினைந்தாவது படத்தை நடிக்கிறார். இப்படக்குழுவிலிருந்து அருள்நிதிக்கு ஒரு பிறந்தநாள் வாழ்த்து போஸ்டரை வெளியிட்டுள்ளனர். பெயர் சூட்டப்படாத இப்படத்தை தற்போதைக்கு அருள்நிதி 15 என்று அழைக்கிறார்கள். அருள்நிதி 15 படக்குழுவின் பிறந்தநாள் வாழ்த்து போஸ்டர் பதிவை கீழே காணுங்கள்.
இப்படத்திற்கும் அரவிந்த் சிங்கே ஒளிப்பதிவு செய்கிறார். அதுமட்டுமின்றி அவரே இப்படத்தை தயாரிக்கவும் செய்கிறார். இப்படத்தை குறித்த பதிவில் அரவிந்த் சிங் இதற்குமுன் இல்லாததுபோல் அருள்நிதி இப்படத்தில் இளமையாக தோன்றுவார் எனக் குறிப்பிட்டுள்ளார். இப்படத்திற்கு ரோன் யோகன் இசையமைக்கிறார்.
டைரி மற்றும் அருள்நிதி 15 படங்களுக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட தொடங்கி விட்டது என்றே கூறலாம். நடிகர் அருள்நிதிக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.