Specials Stories

அனைவருக்கும் Favorite ஆன அரவிந்த் சுவாமி !!!

அரவிந்த் சுவாமி என்றாலே 70’ஸ், 80’ஸ் கிட்ஸ் முதல் 2K கிட்ஸ் வரைக்கும் எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும். சினிமாவில் உலாவி வரும் நமக்கு தெரிஞ்ச சாக்லேட் பாய்ஸ்-க்கு முன்னாடியே, சாக்லேட் பாயாகவும், கனவு கண்ணனாகவும், வலம் வந்தவர் அரவிந்த் சுவாமி.

ஒரு துணை நடிகராக அறிமுகப்படுத்தப்பட்டு, பின்பு ஹீரோவாக வலம் வந்து “தனி ஒருவன்” படத்தில் வில்லனாகவும் தனது கால் தடத்தை பதித்து இருக்கார். ஹீரோவாக பார்த்து பழக்கப்பட்ட அரவிந்து சுவாமியை வில்லனாகவும் மக்கள் பார்த்து ரசிச்சாங்க. நல்லா படிச்சவங்க “வைட் காலர்” வேலைக்கு தான் போவாங்க, நடிக்க வரமாட்டாங்க என்ற பிம்பத்தை உடைத்தவர் அரவிந்த் சுவாமி.

இந்த ஒரு காரணத்தாலேயே அவர் நடிக்க வந்த காலத்துல மிகவும் பிரபலமானார். நடிகனா மட்டுமில்லாம Model-ஆ , Anchor-ஆ , தொழில் அதிபராகவும் இருக்கார். தமிழ் இண்டஸ்ட்ரி-ல 1991ஆம் ஆண்டு நடிகனா கால் தடம் பதித்து அரவிந் சுவாமி பின்னர் மலையாளம், தெலுங்கு இன்டஸ்ட்ரிலையும் தன்னோட கால் தடத்த பதிச்சு இருக்கார். “பம்பாய்” போன்ற சூப்பர்ஹிட் படங்கள்ல நடித்த அரவிந்த் சுவாமி, 2000ஆம் ஆண்டு முதல் வணிகத்தில் ஈடுபாடு காட்டி, தமிழ் சினிமாவுல Gap எடுத்தார்.

Aravind swamy hd image | Clean shaven, Film, Viral

2012- ல History Repeats-ன்ற மாதிரி மீண்டும் தமிழ் சினிமாவில் மணிரத்னம் அவர்களோட கடல்-ன்ற படத்துல “comeback கொடுத்தாரு”. டாக்டர் ஆக வேண்டும் என ஆசை பட்ட அரவிந்த் சுவாமி, B.com மற்றும் மாஸ்டர் டிகிரி படிக்கும் போது பாக்கெட் Money-க்காக Modelling ஆரம்பித்து, லொயோலா கல்லூரியில் தியேட்டர் society சார்பா நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பொழுது மேடையிலிருந்து கீழே இறங்க சொன்னாங்க, அதுக்கு சரியான Performance பண்ணாததே காரணம்-னு சொல்லிருக்காங்க.

ஆனா அதோட விடாம, முயற்சியை கைவிடாம இருந்த அரவிந்த் சுவாமிக்கு ஒரு அழைப்பு வந்தது. அரவிந்த் சுவாமி நடித்த விளம்பரத்தை பார்த்து தேர்வு செஞ்சு தளபதி-ன்ற படத்தில நடிக்க வாய்ப்பு கொடுத்தார் மணிரத்னம். திறமைக்கு சரியான மேடையும், விடாமுயற்சியும், இருந்தால் போதும்-னு புரியவைத்தார், நம் இளமை குன்றாத சாக்லேட் பாய் “அரவிந்து சுவாமி”.

About the author

alex lew