இயக்குனர் ஹரி அருண் விஜய்யை வைத்து இயக்கி வரும் AV33 திரைப்படத்தை குறித்த முக்கிய Update-கள் வெளியாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பிரபல இசையமைப்பாளரும் பாடலாசிரியருமான கங்கை அமரன் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.
பொதுவாக ஹரி இயக்கும் படங்கள் விறுவிறுப்பான திரைக்கதை அம்சத்தையும், குடும்பங்கள் கொண்டாடும் சென்டிமென்ட் காட்சிகளையும் அதிக அளவில் கொண்டிருக்கும். இதற்கு முன் அவர் இயக்கிய கோவில், தாமிரபரணி, சிங்கம், சாமி போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சாமி 2 திரைப்படத்திற்கு பிறகு ஹரி யாரை வைத்து இயக்க போகிறார் என்ற விவாதம் ரசிகர்கள் மத்தியில் இருந்து வந்தது. அருண் விஜய் தான் ஹரி இயக்கும் அடுத்த திரைப்படத்தின் ஹீரோ என்று தெரிந்தவுடன் ரசிகர்கள் உற்சாகத்துடன் இப்படத்தை குறித்த அறிவிப்புகளை கொண்டாடினர்.
அருண் விஜய்யுடன் இணைந்து இப்படத்தில் ராதிகா, யோகிபாபு, பிரியா பவானி சங்கர், அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை ராதிகாவின் 43 ஆண்டு திரையுலக பயணத்தை கொண்டாடும் விதத்தில் படக்குழுவினர் Cake வெட்டி கொண்டாடினர். ராதிகாவிற்கு AV33 படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடும் வீடியோ அடங்கிய ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் இன்று கங்கை அமரன் இப்படத்தில் நடிக்கவுள்ளார் என்பதை உறுதி செய்யும் வகையில் ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளது.
வெளியான புகைப்படத்தில் இயக்குனர் ஹரி கங்கை அமரனுக்கு காட்சியை விளக்கிக் கொண்டு இருக்கிறார். மேலும் அந்த புகைப்படத்தில் நடிகர்கள் இமான் அண்ணாச்சி மற்றும் ராஜேஷ் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர்.
இந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது கங்கை அமரன் இப்படத்தில் ஒரு ஜோசியக்கார வேடத்தில் நடிக்கவுள்ளார் என கணிக்க முடிகிறது. கங்கை அமரனுக்கு ஹரி காட்சியை விளக்கும் புகைப்படத்தை கீழே காணுங்கள்.
ஹரி இயக்கும் திரைப்படங்களில் எப்போதுமே Mass-ஆன சண்டை காட்சிகள் இடம்பெறும். அந்தவகையில் AV33 திரைப்படத்திலும் சண்டை காட்சிகள் அதிகம் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பின்போது அருண் விஜய்க்கு வலது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக அவர் ட்வீட் செய்துள்ளார். காயம் சரியானவுடன் மீண்டும் சண்டைக்காட்சியில் நடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அவர் விரைவில் குணமடைவார் என ரசிகர்கள் நம்புகின்றனர். அருண் விஜய் வெளியிட்ட டுவிட்டர் பதிவை கீழே காணுங்கள்.
AV33 திரைப்படம் வெற்றி அடைய சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.