செல்வராகவன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு கார்த்தி நடித்து வெளிவந்த ஒரு சிறந்த திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இப்படம் இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
பொதுவாக இதுபோன்ற வரலாற்று சிறப்புமிக்க படத்தை தயாரிப்பதற்கு பட்ஜெட் சற்று அதிகமாக தான் தேவைப்படும். இப்படம் வெளியானபோது படத்தின் பட்ஜெட் 32 கோடி என படக்குழுவினர் அறிவித்தனர்.
ஆனால் தற்போது செல்வராகவன் பதிவிட்டுள்ள டுவீட் தமிழ் சினிமா ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது. இப்படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி என செல்வராகவன் தற்போது அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் உண்மையான பட்ஜெட் 18 கோடி தான். ஆனால் நாங்கள் இதை ஒரு மெகா பட்ஜெட் திரைப்படம் என நம்ப வைப்பதற்காக 32 கோடி என கூறினோம். அந்தப் படம் நாங்கள் எதிர்பார்த்த லாபத்தை ஈட்டித் தந்தது. இருப்பினும் பட்ஜெட்டை நாங்கள் மாற்றி கூறியதால் அது ஒரு Average ஆன படம் என்றே Box Office-ல்கருதப்பட்டது. ஒருபோதும் இதுபோன்ற விஷயங்களில் பொய் சொல்லக்கூடாது என கற்றுக் கொண்டேன் ” என பதிவிட்டுள்ளார்.
செல்வராகவனின் tweet-ற்கு ரசிகர்கள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். செல்வராகவன் உண்மையான பட்ஜெட்டை தற்போது அறிவித்ததற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
18 கோடி பட்ஜெட்டில் ஆயிரத்தில் ஒருவன் போன்ற ஒரு பிரமாண்ட படத்தை எடுக்க முடியும் என்பதை கோலிவுட் திரையுலகிற்கு நிரூபித்துள்ளார் செல்வராகவன். தனுஷை வைத்து ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை செல்வராகவன் இயக்கவுள்ளார். அந்த திரைப்படத்தின் அறிவிப்பு போஸ்டர் வெளியானதில் இருந்தே ரசிகர்கள் ஆயிரத்தில் ஒருவன் 2-விற்காக திரை மீது விழி வைத்து காத்திருக்கின்றனர்.
ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தின் பட்ஜெட் குறித்த செல்வராகவனின் tweet-ஐ கீழே காணுங்கள்.
தளபதி விஜய் நடிக்கும் Beast திரைப்படத்தில் செல்வராகவன் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி நடிகை கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து அவர் நடித்துள்ள சாணிக் காயிதம் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படக் குழுவினருடன் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்து திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதை செல்வராகவன் அறிவித்துள்ளார்.
சாணிக் காயிதம் படக்குழுவினரின் Group Photo வை கீழே காணுங்கள்.