சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள Bachelor திரைப்படத்தின் trailer தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் teaser வெளியாகி சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Bachelor திரைப்படத்தில் ஜி.வி பிரகாஷ் குமாருடன் இணைந்து திவ்யபாரதி, முனீஷ்காந்த், பகவதி பெருமாள் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் trailer-ஐ வைத்து பார்க்கும்போது இப்படம் ஒரு காதல் ஜோடிக்கு இடையே நடக்கும் பிரச்சனையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது.
இப்படத்தின் பின்னணி இசையை இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைத்துள்ளார். இன்று வெளியாகியுள்ள trailer-ல் ஒலிக்கும் பாடலை ‘நவக்கரை’ நவீன் பிரபஞ்சம் எழுதி பாடியுள்ளார். trailer-க்கு பின்னணியில் ஒலிக்கும் இப்பாடல் trailer-க்கு மேலும் வலு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளது.
பொதுவாக ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் படங்கள் இளைஞர்களை வெகுவாக கவரும். அந்த வகையில் Bachelor திரைப்படமும் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி படமாக அமையும் என சினிமா ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இப்படம் உலகெங்கும் வருகிற டிசம்பர் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
Bachelor திரைப்படத்தின் trailer-ஐ பிரபல இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், கௌதம் வாசுதேவ் மேனன், விக்னேஷ் சிவன், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர். பிரபலங்களின் வாழ்த்து செய்தி அடங்கிய ட்விட்டர் பதிவுகளை கீழே காணுங்கள்.
Bachelor திரைப்படத்தின் ஆர்வமூட்டும் trailer வீடியோவை கீழே கண்டு மகிழுங்கள்.
இப்படம் வெற்றியடைய படக்குழுவினருக்கு சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.