பாலு மகேந்திராவின் சினிமா பட்டறையில் இருந்து வந்த வைரங்களில் பாலாவும் ஒருவர். இயக்குனரான முதல் படத்திலியே தேசிய விருது. அழுக்காக இருப்பவரும் கூட படத்தின் ஹீரோ தான், ஹீரோயின் வெள்ளையா Slim-ஆ இருக்கனும்னு அவசியம் இல்லை, பாடலுக்காக படம் இல்லை, படத்தில் பாடல் இருந்தால் போதும் அதுவும் ஒன்னு, ரெண்டு தான் என்று தமிழ் சினிமாவின் ஒட்டு மொத்த பரிமானத்தையும் மாற்றி வேறு உலகத்தை கண்ணில் காட்டியவர் தான் பாலா.
பாரதிராஜா, பாக்யராஜ், மணிவண்ணன், சுந்தர் ராஜன், கவுண்டமணி, செந்தில், ராமராஜன் என்று பலருக்கு ஆரம்ப முகவரியா இருந்த 115, எல்டாம்ஸ் ரோடு என்ற முகவரியில் குடியேறினார். நாட்டியப் பேரொளி பத்மினியின் தீவிர ரசிகரான இவர் பாலுமகேந்திரா இயக்கிய சந்தியா ராகம் படத்தில் போஸ்ட்மேனாக நடித்துள்ளார்.
தன் அப்பாவுக்கு அடுத்த படியாக பாலா நேசிக்கும் முதல் மனிதர் பாலுமகேந்திரா. பாலுமகேந்திராவின் “வீடு” படத்தில் முதலில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார். உதவி இயக்குனராகப் பணியாற்றிய “வீடு” படத்தை தியேட்டரில் 37 முறை பார்த்தார் பாலா. சுவாமிமலை சென்றிருந்த போது நேரில் கண்ட அப்பா மகள் நிலையை மையப்படுத்தி சேது படத்தில் கதாநாயகி மற்றும் கதாநாயகியின் அப்பா பாத்திரத்தை வடிவமைத்திருப்பார்.
பாலாவும் விக்ரமும் வாடா போடா என்று பேசிக் கொள்ளும் அளவுக்கு நெருங்கிய நண்பர்கள். படத்தின் தயாரிப்பாளருக்கும், இயக்குனருக்கும் உள்ள Chemistry, Hero – Heroineக்கு இடையில் இருக்கும் Chemistry-யை விட நெருக்கமாக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் அதன் பாதிப்பு நீதிமன்றம் வரை கூட செல்லும்.
பாலாவின் திரைப்படங்கள் விருதுகளுக்காக எடுக்கப்படுபவை என்ற விமர்சனம் தமிழ் சினிமாவில் அதிகம் உண்டு. இருந்தாலும் அவரின் படங்கள் ரசிகர்களை திருப்திப்படுத்த தவறியதில்லை.
இயக்குனர் பாலா அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Article by Jebaraj