சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப்குமார் தளபதி விஜயை வைத்து இயக்கும் பிரம்மாண்ட திரைப்படமான தளபதி 65 திரைப்படத்தின் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட First Look தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தை குறித்த முதல் அறிவிப்பு வந்ததிலிருந்தே தளபதி ரசிகர்கள் அடுத்த அடுத்த அப்டேட்களுக்காக வெறித்தனமான Waiting-ல் இருந்து வந்தனர்.
இப்படத்தின் டைட்டில் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், இப்படத்திற்கு Beast என பெயர் வைத்துள்ளனர்.
நாளை தளபதி விஜயின் பிறந்த நாளையோட்டி இந்த ஃபர்ஸ்ட் லுக் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்களுக்கும் இன்று பிறந்தநாள் என்பது குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள இந்த First Look-ல், தளபதி விஜய் தன் கையில் ஒரு பெரிய துப்பாக்கி ஏந்தியபடி ஸ்டைலாக நின்று கொண்டிருக்கும் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.
ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பை சன் பிக்சர்ஸ் வெளியிட்ட நாள் முதலே தளபதி ரசிகர்களின் கொண்டாட்டம் சமூக வலைதளங்களில் தொடங்கிவிட்டது. “மணி இப்போ மூணு கொஞ்ச நேரத்துல இருக்கு செம Scene-u ” போன்ற எதிர்பார்ப்பை தூண்டும் வரிகளுடன் பல ட்விட்டர் பதிவுகளை சன் பிக்சர்ஸ் தங்களது ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து வெளியிட்டு வந்தனர்.
தளபதி 65 திரைப்படத்திற்கு Rockstar அனிருத் அவர்கள் இசை அமைக்கிறார். ஏற்கனவே தளபதி மற்றும் அனிருத் கூட்டணியில் சமீபத்தில் வெளிவந்த மாஸ்டர் திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.
ஃபர்ஸ்ட் லுக் வெளியான சில வினாடிகளில் இருந்தே தளபதி ரசிகர்கள் சன் பிக்சர்ஸின் இந்த பதிவை பெரிய அளவில் பகிர்ந்து வருகின்றனர். சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ட்விட்டர் பதிவை கீழே காணுங்கள்.