கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து தயாரித்த ‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டானாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்கள் மக்கள் மத்தியிலும் பரபரப்பாக பேசப்பட்டு சூப்பர் ஹிட்டான படங்களை தயாரித்த நிறுவனம் பொட்டன்சியல் ஸ்டுடியோஸ் மீண்டும், வித்தியாசமான மற்றுமொறு தேர்ந்தடுத்த கதைக்கு “பிளாக்” என்று பெயர் வைத்துள்ளார்கள் .
ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். நொடிக்கு நொடி திரில்லர். ஒரு குறிப்பிட்ட இடம் அதாவது அனைவராலும் பயமுறுத்தலான இடமாக பார்க்கப்படும். அந்த இடத்தில் நடக்கும் சம்பவங்கள் விசித்திரமானதாக இருக்கும். இதை பிறரிடம் சொன்னால் நம்ப முடியாத வகையிலும் இருக்கும். இப்படிப்பட்ட கதை தான் #பிளாக்.
நம்மை சூழ்ந்திருக்கும் இருளை பிளாக் என்று சொல்லலாம். யாரும் நம்மை எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நம்முடைய இன்னொரு கருப்பு பக்கத்தை காட்டிகொள்ளாமல் இருப்பதையும் பிளாக் என்று சொல்லலாம். இதுவும் இக்கதைக்கு பொருந்தும் என்கிறார் டைரக்டர் கே.ஜி.பாலசுப்ரமணி
சென்னையில் எடுக்கப்பட்ட இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிவடைந்து படம் வெளியீட்டு வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில் நாயகனாக ஜீவா நடிக்கிறார். இவரது ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.