அருண் விஜய் நடிக்கும் 31-வது படமான ‘பார்டர்’ திரைப்படத்தின் First Look போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. இந்த poster-ஐ ரசிகர்கள் உற்சாகத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.
‘ஈரம்’, ‘ஆறாது சினம்’, ‘குற்றம் 23’, ‘வல்லினம்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அறிவழகன் தான் ‘பார்டர்’ திரைப்படத்தையும் இயக்குகிறார். இப்படத்தில் அருண் விஜயுடன் இணைந்து கதாநாயகிகளாக ரெஜினா காஸண்ட்ரா மற்றும் ஸ்டெஃபி படேல் நடிக்கின்றனர். பிரபல இசையமைப்பாளர் சாம் C.S இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு நேற்று 3D Mapping தொழில்நுட்பம் மூலம் சென்னையில் உள்ள பார்க் ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இப்படத்தில் அருண் விஜய் ஒரு தேசப்பற்று மிக்க ராணுவ வீரனாக வலம் வருவார் என தெரிகிறது.
இந்த First Look போஸ்டரில் அருண் விஜயின் முகத்தில் இந்திய வரைபடம் இடம்பெற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. பார்ப்பதற்கே வித்தியாசமாகவும், ஆர்வமூட்டும் வகையிலும் இந்த First Look போஸ்டர் அமைந்துள்ளது. இப்படத்தின் மீது சினிமா ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படத் தொடங்கியுள்ளது.
ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து பார்டர் திரைப்படம் மாபெரும் வெற்றியடைய வேண்டும் என சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.