பாய்காட் பாலிவுட்னு இந்தி சினிமா ரசிகர்கள் பலரும் கடந்த 2,3 வருஷமா பாலிவுட் படங்கள் எல்லாத்தையும் புறக்கணிச்சுட்டு இருக்காங்க. அது எவ்ளோ பெரிய ஹீரோ, ஹீரோயினோட படமா இருந்தாலும் சரி.
குறிப்பா பாலிவுட்ல வளர்ந்து வந்துட்டு இருந்த இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டோட மர்ம மரணத்துக்கு அப்பறமா தான் இது ஆரம்பிச்சுது. பாலிவுட்ல இருக்க Nepotism, வாரிசு நடிகர்கள் ஆதிக்கம், இன்னும் யாரெல்லாம் புதுசா வளர்ந்து வர நடிகர்கள ஒடுக்குறாங்கனு சமூகவலைதளங்கள்ல #BoycottBollywood ஹாஷ்டேக்ல பொதுமக்கள் கருத்து சொல்ல ஆரம்பிச்சாங்க.
அத தொடர்ந்து Nepotism-ல சம்மந்தப்பட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்களுடைய அடுத்தடுத்த படங்கள் வெளியான சமயத்துல #BoycottBollywood-னு அவர்களோட படங்களை குறிப்பிட்டு அத புறக்கணிக்கனும்னு ட்ரெண்ட் செய்ய ஆரம்பிச்சாங்க. இது சமூகவலைதள ட்ரெண்டிங்கோட மட்டுமே நின்னுடமா நிஜத்துலயும் நடக்கத் தொடங்குனுச்சு. பல பெரிய ஹீரோ, ஹீரோயின், தயாரிப்பாளரோட படங்கள் எதிர்பாராத விதத்துல மிகப்பெரிய நஷ்டத்த சந்திச்சுது.
அமீர்கான், அக்ஷய்குமார், அலியா பட்னு பலரோட படங்கள் #BoycottBollywood னால பாதிக்கப்பட்டுச்சு. இதப்பார்த்து பாலிவுட் சினிமாவே பயப்பட ஆரம்பிச்சுட்டாங்க. நாளடைவுல இது வழக்கமாவே மாறிடுச்சு. தொடர்ந்து எல்லா படங்களும் வசூல் ரீதியா தோல்விய சந்திக்க ஆரம்பிச்சுது. அதே சமயத்துல தென்னிந்திய படங்கள பாலிவுட் சினிமா ரசிகர்கள் கொண்டாட ஆரம்பிச்சாங்க.
தமிழ்ல விக்ரம், பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களுக்கு பாலிவுட் ரசிகர்கள் கிட்ட பெரிய வரவேற்பு கிடைச்சுது. தென்னிந்திய படங்கள் பத்தி சமூகவலைதளங்கள்லயும் பாலிவுட் ரசிகர்கள் நிறைய பேச ஆரம்பிச்சாங்க. இதுக்கு நடுல #BoycottBollywood ஹேஷ்டேக பயன்படுத்தி ஒரு படத்தோட அறிவிப்பு வெளியாகுறதுல இருந்து, ட்ரெய்லர், பாட்டு, பட ரிலீஸ் வரைக்கும் பாய்காட் பண்ண ஆரம்பிச்சாங்க.
அதே சமயம் இதுதான் சாக்குனு அடிப்படைவாதிகள், மதவாதிகள் பலரும் #BoycottBollywood-ல கருத்து சொல்ல ஆரம்பிச்சாங்க. ‘நான் இந்த நாட்ல பாதுகாப்பா உணரல’ அப்டினு ஆமிர் கான் முன்னாடி ஒரு சமயம் சொல்லிருப்பாரு. ஆமிர் கானின் லால் சிங் சத்தா படம் வெளியாகுற சமயத்துல, இந்த விஷயத்த சொல்லி அவர புறக்கணிக்கனும்னு சொன்னாங்க. ரன்பீர் கபூர் எனக்கு மாட்டிறைச்சி ரொம்ப பிடிக்கும்னு ரொம்ப நாள் முன்ன சொல்லிருப்பாரு.
ரன்பீர் கபூர், அலியா பட் நடிச்ச பிரம்மாஸ்திரா படம் வெளியான சமயத்துல, இந்த விஷயத்த வச்சு அவர புறக்கணிக்கனும்னு சொன்னாங்க. இப்படி ஒவ்வொருத்தருக்கும், ஒவ்வொரு படத்துக்கும் இன்னைக்கு வர எதாவது பண்ணிட்டே இருக்காங்க. இதனால ஒரு கட்டத்துல கடுப்பான பாலிவுட் நடிகர், நடிகைகள் இதுக்கு எதிரா கருத்து சொல்ல ஆரம்பிச்சாங்க.
விருப்பமா இருந்தா படம் பாருங்க, இல்லாட்டி பாக்காதிங்க, எங்களுக்கு கவலையில்லனு வெளிப்படையா சொல்ல ஆரம்பிச்சாங்க. இப்படி போயிட்டு இருந்த சமயத்துல, இந்த #BoycottBollywood வரிசைல… ஷாருக்கான், தீபிகா படுகோன் நடிப்புல உருவான பதான் படத்துக்கும் கடுமையான விமர்சனங்கள், எதிர்ப்புகள் வர ஆரம்பிச்சுது. படத்தின் பேஷரம் ரங் பாடல்ல, தீபிகா படுகோன் ரொம்ப கிளாமரான உடைகள் போட்ருப்பாங்க.
அதுல ஒரு உடை காவி நிறத்துல இருக்கும். உடனே இந்த பாட்டு காவி நிறத்த அவமதிக்குற மாதிரி இருக்கு, குறிப்பிட்ட தரப்பினருக்கு எதிரா இருக்குனு வலது சாரி அடிப்படைவாதிகள் விமர்சிக்க ஆரம்பிச்சுட்டாங்க. இப்படி மத ரீதியான உணர்வுகள புண்படுத்துறதா ஒரு படத்துக்கு எதிர்ப்பு கிளம்புறது இந்தியால புதுசில்ல. ‘லிப்ஸ்டிக் அண்டர் மை புர்கா’ , பத்மாவத் போன்ற பல படங்கள் ஏற்கனவே பாலிவுட்ல இது மாதிரியான எதிர்ப்புகளை சந்திச்சுருக்கு.
இந்த பிரச்னைல உச்ச கட்டமா போய் மத்திய பிரதேசம், இந்தூர்ல தீபிகா படுகோன், ஷாருக்கான் உருவ பொம்மைகளுக்கு தீ வச்சு எரிச்சாங்க. அதே மாதிரி குஜராத்ல, பஜ்ரங் தல் அமைப்ப சேர்ந்தவங்க ஒரு மால்ல இருந்த பதான் பட போஸ்டர்கள கிழிச்சு, உடைச்சாங்க. இப்படி #BoycottBollywood ஹேஷ்டேக் உருவான நோக்கம் வேற ஒன்னா இருந்தாலும், இன்னைக்கு இந்த ஹேஷ்டேகோட நிலை வேற மாதிரி மாறிடுச்சு.
இதையெல்லாம் கடந்து இந்த வரிசைல பல விமர்சனங்கள சந்திச்ச ஷாருக்கான் நடிப்புல உருவான பதான் திரைப்படம் 2023 ஜனவரி 25ஆம் தேதி வெளியாச்சு. வழக்கமான #BoycottBollywood போக்குல இந்த படமும் ஓடாதுனு பலரும் நினைச்சாங்க. ஆனா அது எல்லாத்தையும் தூக்கியடிக்கிற மாதிரி பதான் திரைப்படம் மிகப்பெரிய இண்டஸ்ட்ரி ஹிட் படமா மாறுச்சு. 225 கோடி ரூபாய் பட்ஜெட்ல உருவான படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல வசூல் பண்ணுச்சு.
இந்தியால 1000 கோடி ரூபாய் வசூல் சாதனை பண்ண படங்கள் பட்டியல்ல 4வது இடத்த பதான் பிடிச்சு All Time BlockBuster Hitனு பேரும் வாங்குச்சு. தன்னுடைய பையன் ஆர்யன் கான் மேல இருந்த வழக்கு, லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்தினதுல பிரச்னை, பதான் பட பிரச்னைனு தொடர்ந்து ஷாருக்கானுக்கு பல பிரச்னைகள் வந்துட்டே இருந்துச்சு. தீபிகா படுகோனுக்கும் அப்படிதான், பத்மாவத் படத்துலயே நிறைய பிரச்னைகள பாத்துட்டாங்க.
லேட்டஸ்டா கெஹரியான் பட பிரச்சனை, பதான் படத்துல காவி ட்ரெஸ் பிரச்னை, கல்யாணத்துக்கு பிறகு ஒரு பொண்ணு இப்டி நடிக்கலாமா, கவர்ச்சி காட்டி நடிக்கனும்னு என்ன அவசியம் இருக்குனு பல கேள்விகள். இது எல்லாத்துக்கும் சேர்த்து வச்சு, இவங்க 2 பேரும் சேர்ந்து கொடுத்த பதிலடி தான் பதான் திரைப்படத்தோட இண்டஸ்ட்ரி ஹிட்.
இந்த படம் மூலமா Haters எதும் பேச முடியாதபடி வாயடைக்க வச்சிருக்காங்க தீபிகா படுகோன். அதே போல பாலிவுட் பாட்ஷாடா நான் அப்டினு திரும்ப ஒருமுறை நிரூபிச்சு காட்டியிருக்காரு ஷாருக்கான்.