நம்மகிட்ட தமிழ் சினிமால முன்னணி இயக்குனர்கள் யாருனு கேட்டா ஒரு பத்து வருஷத்துக்கு முன்னாடி ரஜினி, கமல், விஜய் , அஜித் இவங்கள வச்சு படம் எடுத்த இயக்குனர்கள் பெயர தான் பலரும் சொல்லுவோம். ஆனா 2012க்கு அப்பறம் இப்ப வரை முன்னணி இயக்குனர்கள் யாருனு நம்ம கிட்ட கேட்டா பெரிய நடிகர்களை வச்சு படம் எடுக்காத பல பேரோட பெயர சொல்வோம். இதுக்கு காரணம் யார வச்சு படம் எடுத்தாலும் நம் பண்ற கதை தான் நம்மல முன்னணி இயக்குனரா மாத்தும்னு பல நல்ல நல்ல இயக்குனர்களை கோலிவுட் சினிமால அறிமுகப் படுத்தின தயாரிப்பாளர் C.V Kumar.
Tours & Travels Field-ல மிகப்பெரிய Business Man-ஆ இருந்த நம்ம C.V.Kumar உலகத்துல பல இடங்கள சுத்தி பாத்தாச்சு, இனி சினிமா உலகத்த சுத்தி அங்க ஒரு Business பண்ணுவோம்னு தான் தயாரிப்பாளர் அவதாரம் எடுத்தாரு. பாட்ஷா படத்துல ஒரு பாடல் வரி வரும், அவன் பேருக்குள்ள காந்தும் உண்டு உண்மைதானப்பானு இந்த வரி “Thirukumaran Entertainment” இந்த பெயருக்கு சரியா பொருந்தும்.
இசைஞானி இளையராஜா, இசை புயல் A.R.ரகுமான் இவங்க இசைல ஒரு பாடல் வரப்போதுனு சொன்னாலே நம்ம மனசுக்குள்ள கண்டிப்பா அது நல்லா தான் இருக்கும்னு ஒரு எண்ணம் வரும்! அந்த எண்ணமும் சரியா தான் இருக்கும். அது போல தான், C.V.Kumar தயாரிப்புல Thirukumaran Entertainment-ல இருந்து ஒரு படம் வந்தா கண்டிப்பா அது நல்லாவும், ரொம்ப வித்தியாசமான கதையாவும் இருக்கும் அப்படினு ஒரு எண்ணத்த மக்கள் மனசுல உருவக்கியிருக்காரு.
என்னதான் சினிமாக்கு வரதுக்கு முன்னாடியே பெரிய Business Man-ஆ இருந்தாலும் முதல் படம் தயாரிக்க வந்த அப்போ பயம் கொஞ்சம், இல்ல இல்ல ரொம்ப அதிகமாகவே இருந்ததா ஒரு பேட்டில C.V.Kumar சொல்லியிருந்தாரு. சின்ன பயம் பெரிய எதிர்பார்ப்போட C.V.Kumar தயாரிப்புல வந்த முதல் படம் தான் பா.ரஞ்சித் இயக்கத்துல வந்த ‘அட்டக்கத்தி’.
இந்த படத்துல இயக்குனர், இசையமைப்பாளர், தயாரிப்பளார்னு எல்லாருமே புதுசா இருந்தாலும் கதையும் ரொம்ப புதுசா இருந்ததால படம் செம்ம ஹிட்டு. அந்த ஹிட்டு தான் பா.ரஞ்சித் எனும் நல்ல இயக்குனரையும் சந்தோஷ் நாராயணன் எனும் இசை இளவரசனையும் கோலிவுட் சினிமாக்கு தந்துச்சு.
சினிமால முதல் வெற்றி எந்தளவு முக்கியமோ அதவிட மலையளவு ரொம்ப பெரிய வெற்றிய தந்தா தான் நம்மள சினிமா கொண்டாடும். ஆனா C.V.Kumar-க்கு ரெண்டாவது வெற்றி இமயமலையளவு பெயரை வாங்கி தந்துச்சு. அது தான் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்துல Thirukumaran Entertainment தயாரிப்புல வெளிவந்த ‘பீட்சா’. கார்த்திக் சுப்புராஜ்-க்கு கோலிவுட் சினிமால ஒரு பாதைய உருவாக்கி கொடுத்தாரு C.V.Kumar.
எப்பவும் ஒரு Business Man தான் மட்டும் வளரனும்னு நெனச்சா அது நிலைக்காது. நம்ம போற பாதைல பலரையும் அழைச்சிட்டு போனா தொழிலும் சரியா நடக்கும், நம்ம பேரும் காலத்துக்கும் நிலைச்சிருக்கும். அந்த விஷயத்த சரியா பண்ற தயாரிப்பாளர் தான் C.V.Kumar.
குறும்பட இயக்குனர்கள் பலருக்கு பெரிய படம் இயக்குவதற்கான வாய்ப்பு Thirukumaran Entertainment-ல கிடைக்கும் என்ற நம்பிக்கையை பீட்சா மூலம் கொடுத்த C.V.Kumar, அடுத்து தயாரிச்ச படம் தான் நளன்குமார சாமி இயக்கத்துல வந்த “சூது கவ்வும்”. இந்த படம் எப்ப பார்த்தாலும் பார்த்துட்டே இருக்கலாம். கதையும் சரி, இசையும் சரி பிண்ணிருப்பாங்க! சும்மாவா Thirukumaran Entertainment C.V.Kumar தயாரிப்புல வந்த படமாச்சே.
இப்படி அடுத்தடுத்து கோலிவுட் சினிமால தெகிடி, இன்று நேற்று நாளை, பீட்சா 2, முண்டாசுப்பட்டி, இறுதிச்சுற்று, இறைவி, காதலும் கடந்து போகும், எனக்குள் ஒருவன், 144, அதே கண்கள்-னு பல வெற்றி படங்கள தந்துட்டு இருந்த தயாரிப்பாளர் C.V.Kumar இயக்குனர் அவதாரம் எடுத்த முதல் படம் தான் “மாயவன்”.
பலரையும் வியக்க வச்ச ஒரு கதையாவும் , திரும்ப திரும்ப பாக்க வச்ச படமாவும் இருந்துச்சு. மாயவன் படத்த பாக்கம யாரும் இருந்தா அவங்க கண்டிப்பா ஒரு நல்ல தரமான படத்த மிஸ் பண்ணிட்டாங்கனு தான் நான் சொல்லுவேன். மாயவனுக்கு அப்பறம் சில படங்கள தயாரிச்ச C.V.Kumar மறுபடியும் ‘Gangs of Madras’-னு ஒரு படம் இயக்குனாரு, இந்த கதையும் ஒரு வித்தியாசமான கதைக்களமா இருந்துச்சு.
இப்படி நல்ல நல்ல படங்கள இயக்கி, தரமான படங்கள தயாரிச்சு, பல இயக்குனர்கள, இசையமைப்பாளர்கள தமிழ் சினிமால உருவாக்கி புது படைப்புகளை தந்துட்டு இருக்க C.V.Kumar-ன் சினிமா பயணம் சின்ன Speed Breaker கூட இல்லாம சிறப்பா அமைய சூரியன் FM-ன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.