“சின்ன வயசுல இருக்கும்போது எங்க வீட்டு பக்கத்துல இருக்குற தியேட்டர்ல தான் தமிழ் பாடல்களை கேட்கமுடியும் , அப்படிதான் இளையராஜா அவர்களோட பாடல்களை கேட்டேன் .
ஜானகி அம்மா , சுஷீலா அம்மா பாடின கஷ்டமான பாடல்களை நெறைய Practice பண்ணி கத்துக்கிட்டு பாடுவேன். இளையராஜா அவர்களை நான் சந்திப்பேன்னு நினைச்சு கூட பாக்கல. அந்த சமயத்துல மலையாளத்துல வந்த பூவே பூச்சூடவா படத்த தமிழ்ல ரீமேக் பண்ணும்போது அதுல என்ன பாட வைக்க பாசில் சார் இளையராஜா அவர்களை மீட் பண்ண சொன்னாரு, அவரை முதன் முதலா சந்திக்க யேசுதாஸ் அவர்கள் கூட தான் போனேன்.
ரொம்ப பதட்டமா இருந்துச்சு… முதல்ல ஒரு தியாகராஜர் கீர்த்தனை தான் பாடினேன் நிறைய மூச்சு எடுத்து, டென்க்ஷனா நிறைய தவறுகளோட பாடினேன். ராஜா அவர்களே கரரெக்ஷன்ஸ் சொல்லி குடுத்தாரு, அப்புறம் நல்லாருக்கா இல்லையானு சொல்லாம All the best-ன்னு மட்டும் சொல்லி அனுப்பி வச்சுட்டாரு.
கண்டிப்பா நான் பாடினது பிடிக்காதுன்னு தான் நெனச்சேன். ஆனா அடுத்த நாளே ‘நீ தான அந்த குயில்’ படத்துக்கான என்னோட முதல் பாடல் ரெகார்டிங் அமைஞ்சுது”னு ஒரு நேர்காணல்ல தன்னோட முதல் பாடல் அனுபவத்தை பகிர்ந்துகிட்டது யாரு தெரியுமா? சின்ன தடுமாற்றம் , சின்ன பிசிறு கூட இல்லாம படு நேர்த்தியாக பாடக்கூடிய நம்ம சின்னக்குயில் சித்ரா அம்மா தான்.
என்னைக்குமே மாறாத வெகுளித்தனம் , மாற்றமே இல்லாத புன்சிரிப்பு , கொஞ்சம் கூட பிசிறு தட்டாத குரல், கேட்க கேட்க திகட்டாத இனிமை இதுக்கெல்லாம் அகராதியில் அர்த்தம் தேடினா சின்னக்குயில் சித்ரா அவர்களோட பெயர்தான் இருக்கும் .
வாழ்வின் வெம்மைகள்லயும், துயரங்கள்லயும் , தத்தளிக்கும்போது நம்ம எல்லாருக்கும் இளைப்பாறல் தருவது இசைனா அந்த இசைக்கான முகவரி சித்ரா அம்மாவோட குரல். அவசரத்துல காலை நேர பதட்டத்துல, அலுவலகம் போகும் போது இருக்கும் பரபரப்புலயும் பதற்றத்துலயும் எங்கயோ வானொலில சித்ரா அவர்களோட குரலை கேட்டா போதும் நம்ம மனசு சின்னதா இளைப்பாறி அன்னைக்கு நாள் முழுக்க உற்சாகத்த பூசிக்கும் .
அதுலயும் குறிப்பிட்ட ஒரு சில பாடல்கள் நம்ம எல்லாருக்குமே நெருக்கமான பாடல்களா தான் இருக்கும் , பவித்ரா படத்துல வர அழகு நிலவே பாட்ட கேக்கும் போதெல்லாம் நமக்கு மட்டும் தனியா தாலாட்டு பாடறாங்களோனு தோணும், திருடா திருடா படத்துல வர புத்தம் புது பூமி வேண்டும் பாட்ட கேட்டா இந்த பூமி புதுசா பிறந்து வந்திருமோனு தோணும்.
அதுலயும் ஒவ்வொரு பூக்களுமே பாட்டுல மழையோ அது பனியோ நீ மோதிவிடுன்னு சித்ரா அம்மா பாடும்போது நிச்சயம் எல்லார் மனசுலயும் ஒரு நம்பிக்கை துளிர்விடும் . இன்னிசையில் ஆர்பரிப்பில்லாத அனுபவங்களை தந்த இவங்க பாடல்கள்ல எதையுமே மிஸ் பண்ண முடியாது . சித்ரா அம்மா குரல்ல வந்த பாட்ட CALLER TUNE-ஆ வச்சா பகைவர்கள் கூட பகை மறந்து பாசம் காட்டுவாங்கன்றதுதான் உண்மை .
6 தேசிய விருதுகள், 8 பிலிம்ஃபேர் விருதுகள், 36 மாநில விருதுகள்னு தேசம் கடந்து நேசம் பரப்புகிறது இவர் குரல் . சித்ரா அம்மா நம் தலைமுறைக்கான சொத்து, தலைமுறைகள் கடந்து நிற்கும் பாடகி. தொடர்ந்து 43 வருடங்களாக தொடர்ந்து தனது ஆர்ப்பரிக்கும் குரலால் அனைவரையும் அரவணைக்கும் பேரன்புக்காரி சித்ரா அம்மாவிற்கு SURYAN FM-ன் பிறந்த நாள் வாழ்த்துக்கள் .