சிவாஜிய அடுத்து, நடிப்புல வாழ்ந்து அவரையும் தாண்டி பல சாதனைகள பண்ணிட்டு இருக்கது நம்ம உலகநாயகன் கமல்ஹாசன். உலகநாயகனுக்கு அப்பறம் எந்த ஒரு கதாபாத்திரமா இருந்தாலும் அதுல வாழ்ந்து, கொடுத்த கதாபாத்திரத்துக்காக உயிர கூட பொருட்படுத்தாம 15வது மாடில இருந்து குதிக்கனுமா? டூப் இல்லாம சண்டை காட்சி நடிக்கனுமா? 100 கிலோ எடை ஏறனுமா, 35 கிலோவா குறையனுமா? இப்படி எதையும் செய்ய தயாரான ஒரு நடிகன் தான் “சியான் விக்ரம் “
1990-ல வெளிவந்த என் காதல் கண்மணி படம் மூலமா தான் விக்ரம் தமிழ் சினிமால அறிமுகம் ஆனாரு, கடைசியா விக்ரம் நடிப்புல இப்ப OTT-ல வெளிவந்த படம் மகான். படம் பாத்த ரசிகர்களை, “விக்ரம் ரசிகன் நான், என்னா நடிப்புடா சாமி!படம் தியேட்டர்ல வந்தா கொண்டாடியிருப்போம்! அப்படி இப்படினு பல விமர்சனத்த சொல்ல வச்சாரு”. ஏன்னா விக்ரம் நடிப்பும், சினிமாக்காக அவரு தன்னை அர்ப்பணிக்க யோசிக்காததும் தான் அதுக்கு காரணம்.
இப்ப இதை நீங்க படிக்குற இந்த நேரத்துல உங்களுக்குள்ள ஒரு கேள்வியா எந்த ஒரு கதாபாத்திரம்னாலும் அத செம்மய நடிக்கிற நடிகர் யாருனு கேட்டா கண்டிப்பா சியான் விக்ரம்னு 10 நொடி கூட யோசிக்கமா சொல்வீங்க.
ஆனா இந்த பதில நம்மள சொல்ல வைக்க, சினிமாக்கு வந்து விடாமுயற்சியோட 9 வருஷமா ஒவ்வொரு நாளும் ‘விக்ரம்’ அப்படிங்குற தன்னோட பெயர திரைல பாக்கும் போது அரங்கத்துல இருக்க மொத்த கூட்டமும் ஒத்த சத்தமா கைத்தட்டல், விசில் அடிக்கனும்னு கடினமா உழைச்சாரு. 1999-ல வெளிவந்த சேது படத்தால சியான் விக்ரம் அப்படிங்குற பெயரோட அதையும் சாதிச்சாரு.
முதல் 9 வருஷமா பல தோல்விகளை மட்டும் தான் விக்ரம் பாத்தாரு, ஆனா எங்கேயும் துவண்டு போகல. சியான் விக்ரமோட நெருங்கிய நண்பரான நம்ம தளபதி விஜய் ஒரு மேடைல சொல்லியிருப்பாரு, நமக்கான Train வரனும்னா நாம கொஞ்ச நேரம் Platform-ல காத்திருக்கனும்னு. அந்த மாதிரி தமிழ் சினிமால தன்னோட முதல் வெற்றிக்காக காத்திருந்த விக்ரமுக்கு சேதுவோட வெற்றி கிடைச்சது மட்டுமில்லாம அடுத்தடுத்து ரயில் பெட்டிகள் போல காசி, சாமி, தூள், தில், அந்நியன், பிதாமகன், அருள், ராவணன், தெய்வத்திருமகள் இப்ப வந்த மகான் வரைக்கும் தொடர்ந்திட்டு இருக்கு.
காத்திருந்தா சினிமால நல்ல வாய்ப்பும், உண்மையா உழைச்சா சினிமால நல்ல பெயரும், மக்கள் மனசுல தனி இடமும் கிடைக்கும்னு பலருக்கும் நம்பிக்கைய தந்த சியான் விக்ரம் இன்னும் பல நல்ல படங்கள தமிழ் சினிமாக்கு தந்து வெற்றி மேல வெற்றியோட தூள் கிளப்ப சூரியன் FM சார்பில் வாழ்த்துக்கள்.