Cinema News Stories

13-ம் வருட வெப்பம்

அம்மா சென்டிமெண்டோட ஆரமிக்ற படம் தான் 2011-ல் வெளிவந்த வெப்பம் திரைப்படம். படத்தோட Duration 1 மணி நேரம் 47 நிமிடம் இந்த duration-ல காதலோடு சேர்த்து சண்டை காட்சி நிறைந்த ஒரு விறு விறுப்பான crime படம். படத்தை இயக்கியவர் பெண் இயக்குனர் Anjana ali khan.

இந்த படத்துல நானி,கார்த்திக்குமார், நித்யாமேனன், பிந்துமாதவி -னு புதுமுகங்களா நடிச்சுருப்பாங்க. நானியோட முதல் தமிழ் படமும் கூட.. சின்ன வயசுல இருந்தே நானி,கார்த்திக்குமார், நித்யாமேனன் இவங்க ஒன்னாவே தான் வளர்றாங்க. இவங்களுக்குள்ள இருக்குற அந்த friendship bonding-ம் நல்லா இருக்கும்.

நடுவுல நானி, நித்யாமேனன் இவங்களுக்குள்ள ஒரு பக்கம் காதல் போய்கொண்டு இருக்கும். கார்த்திக் குமார், பிந்து மாதவிய காதலிக்குறாரு. ஆனா பிந்துமாதவி ஒரு பிரச்சனையில் இருகாங்க, பிந்து மாதவிய அதுல இருந்து வெளிக்கொண்டு வந்து கல்யாணம் பண்ணனும்னா, நீங்க நான் சொல்ற deal-ல முடிச்சி தரனும்னு சொல்றாரு ஹீரோவோட அப்பா.

பிறகு இவங்க ரெண்டு பேரும் பிரச்சனைல மாட்டிக்குறாங்க Then அந்த பிரச்சனைல கார்த்திக்குமார் இறந்துடுவார்,கார்த்திக்குமார் இறந்ததும் பிந்துமாதவியும் இறந்துடுறாங்க. கார்த்திக்குமார யார் கொலை பண்ணிருப்பா? எதுக்காக கொலை பண்ணாங்கன்னு படம் அடுத்தடுத்து twist குடுத்து போயிட்டு இருக்கும்.

Starting-ல ஹீரோ தான் பணத்துக்காக கொலை பண்ணிட்டாங்கனு நானிய police arrest பண்ணிடுவாங்க. அவர வெளிய எடுக்க ஹீரோவோட அண்ணா ரொம்ப போராடுவார். இதுல இன்னொரு விஷயம் என்னனா ஹீரோவோட அண்ணன் character-ku dubbing voice குடுத்தது Gautham Vasudev Menon தான், படத்தோட Producer-ம் Gautham Vasudev Menon தான்.

இப்படி படம் விறு விறுப்பா போய்டிருக்க நித்யாமேனன் ஹீரோவ இதுல இருந்து வெளிய கொண்டு வர தனியா களத்துல இறங்குறாங்க. ஹீரோவோட அப்பா தான் இவுங்க இந்த பிரச்சனையில் மாட்டுறதுக்கும் காரணம். பிறகு ஹீரோவும் ஹீரோவோட அண்ணனும் சேர்ந்து பிரச்சனைக்கு காரணமா இருந்த அவங்க அப்பாவ கொலை பண்றாங்க. படமும் முடியுது. குறைந்த நேரத்துல ஒரு நல்ல விறு விறுப்பான eminently enjoyable film- னே சொல்லலாம்..

Article by RJ Maya, Salem.

About the author

Suryan Web Desk

A desk hand that tirelessly churns out news articles and videos.