முதல் முறை பூமிக்கு வரும் குழந்தையை ஒரு தாய் அரவணைத்து கொள்வது போல், தன்னுடைய முதல் படத்தில் அறிமுகமான ஜெயம் ரவியை ரசிகர்கள் தாயைப் போல் அரவணைத்து கொண்டாடினர். நடிகர் ஜெயம் ரவி தந்தையின் தயாரிப்பில், சகோதரர் இயக்கத்தில் உருவான படம் தான் ஜெயம்.
2003-ஆம் ஆண்டு ஜூன் 21-ஆம் தேதி வெளிவந்த ஜெயம் திரைப்படம், கிட்டதிட்ட 21 ஆண்டுகளாக மக்கள் மனதில் ஆழமாய் பதிந்திருக்கிறது. காதலுக்கு கண்மட்டும் இல்லை சாதியம் தெரியாது, மதம் தெரியாது, ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு தெரியாது இதுவே காதலாகும்…
தந்தை பெரியார் சொன்னது போல் சாதியம் ஒழிய வேண்டும் என்றால் காதல் மலர வேண்டும் இந்த பூமிபூப்பந்தில். ஜெயம் படம் அதை தான் சொல்கிறது. ஒரு ஏழை குடும்பத்தில் பிறந்த நாயகனுக்கும், மேல்தட்டு வர்கத்தில் பிறந்த நாயகிக்கும் காதல் மலர்கிறது.
அழகான அந்த காதல் குளத்தில் தாய்மாமன் என்ற ஒரு கல்லினால் அதிர்வலைகள் உருவாகிறது. பல போராட்டங்களுக்கு பிறகு இறுதியில் இவர்களின் காதல் ஒன்று சேர்ந்ததா இல்லையா என்பதே ஜெயம் திரைப்படத்தின் கதை. படத்திற்கு இசையமைப்பாளர் பங்கு மிகப்பெரியது ( R. P. Patnaik ).
ஜெயம் ரவி , சதா, வில்லனாய் நடித்த தொட்டெம்புடி கோபிசந்த்யின் அபார நடிப்பில் பார்வையாளர்களை நடுங்கச்செய்தது… அது மட்டுமல்ல “ரவி” என்ற தனது பெயரை தான் நடித்த திரைப்படத்தின் பெயருடன் இணைத்து கொண்டு இன்று வரை அந்த பெயரை தக்க வைத்து கொண்ட நடிகர்கள் “நிழல்கள் ரவி” மற்றும் “ஜெயம் ரவி”.
அப்படி ஒரு நீங்கா அடையாளமாக ஜெயம் ரவி க்கு அமைந்தது “ஜெயம்” திரைப்படம். மொத்தத்தில் இன்னும் 21 ஆண்டுகள் கடந்தாலும் ஜெயம் திரைப்படம் மக்கள் மனதில் நீங்கா திரைப்படமாக பதிந்திருக்கும்.