Cinema News Stories

கர்ணன் திரைப்படத்தின் கண்டா வர சொல்லுங்க வீடியோ பாடல்

கர்ணன் திரைப்படத்தின் Intro பாடலான “கண்டா வர சொல்லுங்க” பாடலின் வீடியோ தற்போது Youtube-ல் வெளியாகியுள்ளது. இப்பாடல் கேட்போருக்கும் பார்ப்போருக்கும் ஒரு புத்துணர்ச்சியையும், Goosebumps-ஐயும் கொடுக்கும் விதத்தில் அமைந்து இருக்கும்.

இப்பாடலின் ஆழமான வரிகளுக்கு கிடக்குழி மாரியம்மாளின் குரல் உயிரூட்டும் விதத்தில் அமைந்துள்ளது என்றே சொல்லலாம். இப்படத்தின் இயக்குனரான மாரி செல்வராஜ் அவர்களே “கண்டா வர சொல்லுங்க” பாடலுக்கு வரிகளை எழுதியுள்ளார். தேக்கம்பட்டி S. சுந்தர்ராஜனின் ” மணிகண்டன கண்டா வர சொல்லுங்க” பாடலின் மெட்டுக்களை கொண்டு சந்தோஷ் நாராயணின் புது வித இசையை இணைத்து உருவாக்கப்பட்ட பாடலே “கண்டா வர சொல்லுங்க”

கர்ணன் திரைப்படத்தின் தொடக்கத்திலேயே, கர்ணனை சிறையில் அடைக்க கொண்டு செல்லும் போது அவனது ஊர் மக்களின் ஏக்கத்தையும், கர்ணன் மீது அவர்கள் கொண்ட பாசத்தையும் வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் அமைந்திருக்கும் . இப்பாடலின் Lyric வீடியோ வெளியான போதே இப்பாடல் பட்டி தொட்டியெங்கும் சூப்பர்ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது. அந்த Lyric வீடியோ 49 கோடிக்கும் மேற்பட்ட பார்வைகளை Youtube-ல் பெற்றுள்ளது.

ஏற்கனவே கர்ணன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை கொண்டாடி வரும் ரசிகர்களுக்கு, இப்பாடலின் வீடியோ Update மேலும் மகிழ்ச்சியளிக்கும் விதமாக அமைந்துள்ளது. “கண்டா வர சொல்லுங்க” பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.