Cinema News Stories Teaser/Trailer

கோடியில் ஒருவன் Trending-லும் ஒருவன் !!!!

விஜய் ஆன்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் திரைப்படத்தின் டீஸர் ஜனவரி 2-ஆம் தேதி வெளியிடப்பட்டது. சினிமா ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக இந்த Update வெளியானது. மெட்ரோ திரைப்படத்தை இயக்கிய அனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார்.

பொதுவாக விஜய் ஆன்டனியின் கதை தேர்வு வித்தியாசமாகவே இருக்கும், அதனால் அவரது படங்களுக்கு எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருக்கும். அந்த வகையில் கோடியில் ஒருவன் டீஸர் வெளிவந்த இரு நாட்களிலேயே youtube-ல் ட்ரெண்டிங் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

இப்படத்தில் விஜய் ஆன்டனியுடன் இணைந்து ‘மீசைய முறுக்கு’ புகழ் ஆத்மிகா, ராமச்சந்திர ராஜு, பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ்.K பிரஸன்னாவின் அதிரடியான இசை இப்படத்தின் டீஸர்-க்கு விறுவிறுப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்தின் டீஸர்-ஐ வைத்து பார்க்கும் போது, இது ஒரு Complete Action படமாக இருக்கும் என தெரிகிறது.

இப்படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆன்டனி-ன் ரசிகர்கள் இந்த டீஸர் Update-ஐ சமூகவலைதங்களில் கொண்டாடி வருகின்றனர். கோடியில் ஒருவன் டீஸர்-ஐ கீழே காணுங்கள்.

About the author

shafin

உங்களில் ஒருவன்

Suryan FM Twitter Feed

Suryan Podcast