Cinema News Stories

கோடியில் ஒருவன் டிரைலர் இதோ !!!

ஆள், மெட்ரோ போன்ற திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன், விஜய் ஆண்டனியை வைத்து இயக்கியுள்ள “கோடியில் ஒருவன்” திரைப்படத்தின் டிரைலர் Youtube-ல் வெளியாகி 1 மில்லியன்-க்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்று டிரெண்டிங் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

பொதுவாக விஜய் ஆன்டனியின் கதை தேர்வு வித்தியாசமாகவே இருக்கும், அதனால் அவரது படங்களுக்கு எதிர்பார்ப்பும் சற்று அதிகமாகவே இருக்கும். இப்படத்தில் விஜய் ஆண்டனியுடன் இணைந்து ‘மீசைய முறுக்கு’ புகழ் ஆத்மிகா, ராமச்சந்திர ராஜு, பிரபாகர் ஆகியோர் நடித்துள்ளனர். நிவாஸ்.K பிரஸன்னாவின் அதிரடியான இசை இப்படத்தின்  டிரைலர் -க்கு விறுவிறுப்பு சேர்க்கும் வகையில் அமைந்திருந்தது. இப்படத்தின் டீஸர்-ஐ வைத்து பார்க்கும் போது, இது ஒரு Complete Action படமாக இருக்கும் என தெரிகிறது.

ஏற்கனவே இப்படத்தின் டீஸர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.  விஜய் ஆண்டனியின் திரையுலக வாழ்க்கையில் இப்படம் ஒரு முக்கிய வெற்றிப்படமாக இருக்கலாம் என சினிமா வட்டாரங்கள் எதிர்பார்க்கின்றன.

இப்படம் வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. விஜய் ஆன்டனி-ன் ரசிகர்கள் இந்த டிரைலர்  Update-ஐ சமூகவலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர். கோடியில் ஒருவன் டிரைலர்-ஐ கீழே காணுங்கள்.