Cinema News Stories

‘மஞ்சணத்தி புராணம்’ வீடியோ இதோ !!!

சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற கர்ணன் திரைப்படத்தின் “மஞ்சணத்தி புராணம்” பாடலின் வீடியோ Youtube-ல் வெளியாகியுள்ளது. இப்பாடலின் Lyric வீடியோ வெளியானதிலிருந்தே பலரின் Playlist-ல் இப்பாடல் ஒலிக்க ஆரம்பித்து விட்டது.

இப்பாடல் மனைவியை இழந்த கணவனின் வேதனையை எடுத்துரைக்கும் பாடலாக அமைந்துள்ளது. தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் காந்த குரல், யுகபாரதியின் அற்புத வரிகளுக்கு உயிர்கொடுத்துள்ளது என்றே கூறலாம். சந்தோஷ் நாராயணின் மயக்க வைக்கும் இசை இப்பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது.

தேவாவின் பல கானா பாடல்களை நாம் நிறைய கேட்டு ரசித்திருந்தாலும், ‘மஞ்சணத்தி புராணம்’ போன்ற கிராமிய பாடல்களை அவர் குரலில் கேட்கும்போது ஒரு இனம் புரியாத இனிமை நம் மனதில் உருவாகிறது. அதுமட்டுமின்றி இப்பாடலின் இடையில் தனுஷின் குத்தாட்டம் பார்ப்போரை துள்ளாட்டம் போட வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

இப்பாடலின் வீடியோ வெளியாகி 24 மணி நேரம் கூட ஆகாத நிலையில் 4.5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இந்த விடியோவை கண்டுகளித்துள்ளனர். இதற்கு முன் வெளியான இப்பாடலின் Lyric வீடியோ 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வைகளை Youtube-ல் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. படத்தின் கதை நகர்வுக்கேற்ப இப்பாடல் கர்ணன் திரைப்படத்தில் அமைந்திருக்கும்.

“மஞ்சணத்தி புராணம்” பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.