Cinema News Stories

Wildu Strawberry வீடியோ இதோ !!!

சாந்தனு மற்றும் அதுல்யா இணைந்து நடித்துள்ள “முருங்கைக்காய் சிப்ஸ்” திரைப்படத்தின் 3வது வீடியோ பாடல் இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வெளியான “ஏதோ சொல்ல” மற்றும் Talku Lessu Worku Moreu” வீடியோ பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

இன்று வெளியாகியுள்ள Wildu Strawberry  வீடியோ பாடலுக்கு நேற்று Promo வெளியானது. அந்த Promo வீடியோ வெளியானதில் இருந்தே முழு வீடியோ பாடலை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்தனர்.

இந்நிலையில் Wildu Strawberry வீடியோ பாடல் வெளியான சில நிமிடங்களில் இருந்தே ரசிகர்கள் உற்சாகத்துடன் அந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். இசையமைப்பாளர் தரண் குமாரின் இசையில் உருவாகியுள்ள இப்பாடல் இளம் ரசிகர்களை கவரும் Peppy பாடலாக அமைந்துள்ளது.

இப்பாடலுக்கு பாடலாசிரியர்கள் ரவீந்தர் சந்திரசேகரன் மற்றும் மாலி ஆகியோர் இணைந்து வரிகளை எழுதியுள்ளனர். இப்பாடலின் வீடியோவில் சாந்தனு மற்றும் அதுல்யாவின் நடனம் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளது.

பிரியா மாலியின் குரல் இப்பாடலுக்கு மேலும் வலு சேர்க்கிறது. முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் சாந்தனு உடன் இணைந்து அவரது தந்தையான பாக்யராஜ், யோகி பாபு, மனோபாலா, மதுமிதா, முனிஸ்காந்த் போன்ற பலர் நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. முருங்கைக்காய்சிப்ஸ் திரைப்படம் வெற்றிபெற சூரியன் FM சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இன்று வெளியாகியுள்ள Wild Strawberry பாடலின் வீடியோவை கீழே காணுங்கள்.