Specials Stories

கமர்ஷியல் சினிமா கிங் ‘சுந்தர்.சி’

Sundar-C

உலகத்துல இருக்க எல்லாருக்குமே கண்டிப்பா ஒரு திறமை இருக்கும். ஆனா ஒரு சில பேருக்கு தான் கூடுதலா இன்னும் சில திறமைகள் இருக்கும். அந்தவகையில நம்ம தமிழ் சினிமாவுல பன்முகத் திறமைகள் கொண்ட சில கலைஞர்கள் இருக்காங்க. அதுல ஒருத்தரை பத்தி தான் இப்ப நாம தெரிஞ்சுக்க போறோம்.

தமிழ் சினிமால ஒரு இயக்குனரா அறிமுகமாகி நிறைய வெற்றிப் படங்களை கொடுத்தது மட்டுமில்லாம, ஒரு நடிகனாகவும் நிறைய வெற்றிப் படங்களை குடுத்துட்டு இருக்கிறவர் தான் சுந்தர்.சி.

வாய் விட்டு சிரித்தால் நோய் விட்டு போகும்னு சொல்லுவாங்க, அந்த வகையில மக்கள் சிரிச்சு சந்தோசமா இருக்கணும் அப்படிங்கறத மனசுல வச்சு இவர் படம் எடுப்பாரு. வயிறு வலிக்க சிரிக்கிற அளவுக்கு இவருடைய படங்கள்ல அவ்வளவு காமெடி இருக்கும். இவர் 1995 ஆண்டு ஜெயராம், கவுண்டமணி, குஷ்பூ, செந்தில் நடித்த முறைமாமன் படம் மூலமா தமிழ் சினிமால இயக்குனரா அறிமுகமானார்.

அதுக்கப்புறம் இவர் எடுத்த உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, உனக்காக எல்லாம் உனக்காக, வின்னர், தலைநகரம், நகரம் மறுபக்கம், தீயா வேலை செய்யணும் குமாரு, கலகலப்பு, கலகலப்பு 2, அரண்மனை, அரண்மனை 2 இந்தப் படங்கள் எல்லாத்துலயும் காமெடிக்கு பஞ்சம் இருக்காது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நடிச்சு BlockBuster Hit-ஆன ‘அருணாச்சலம்’ படத்தையும் இயக்குனது இவர்தான். உண்மையான அன்புனா என்ன அப்படிங்கறத பல பேருக்கு புரிய வச்ச உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் நடித்த ‘அன்பே சிவம்’ படத்த இயக்குனதும் இவர்தான். இப்போ அரண்மனை 1, 2,3 னு ஆக்ஷன் த்ரில்லர் படங்களையும் இயக்கி இருக்காரு. இப்படி இவருடைய படங்கள் எல்லாமே கமர்ஷியல் சூப்பர் ஹிட்.

ஒரு இயக்குனரா நிறைய வெற்றி படங்களை கொடுத்த இவர் தலைநகரம் படம் மூலமா ஒரு நடிகராக தன்னோட வெற்றியை நிலைநாட்ட ஆரம்பிச்சாரு. தொடர்ந்து வீராப்பு, ஆயுதம் செய்வோம், பெருமாள், தீ, ஐந்தாம் படை, குரு சிஷ்யன், வாடா, நகரம் மறுபக்கம், முரட்டுக்காளை, முத்துன கத்திரிக்கா, அரண்மனை, அரண்மனை 2, இருட்டு- னு நிறைய படங்கள்ல அவரோட நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி தன்னை ஒரு சிறந்த நடிகரா நிரூபிச்சுருக்காரு.

தமிழ் சினிமாவுக்கு நீண்ட பங்களிப்பு அளித்து வரும் இயக்குனர் மற்றும் நடிகரான சுந்தர்.சி. அவர்களுக்கு சூரியன் FM சார்பில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

Article By RJ Suba